‘2024-ம் ஆண்டுக்குள் அமெரிக்காவைவிடவும் தரமான சாலைகள்’ - நிதின் கட்கரி சபதம்!

‘2024-ம் ஆண்டுக்குள் அமெரிக்காவைவிடவும் தரமான சாலைகள்’ - நிதின் கட்கரி சபதம்!

2024-ம் ஆண்டுக்குள், உத்தர பிரதேசத்தின் சாலைகள் அமெரிக்கச் சாலைகளைவிடவும் தரமானவையாக மாற்றப்படும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருக்கிறார்.

லக்னோவில் நேற்று நடந்த இந்திய சாலை காங்கிரஸ் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய நிதின் கட்கரி, உத்தர பிரதேசத்தின் சாலைகளை மேம்படுத்த 8,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார். மேலும், “2024-ம் ஆண்டுக்குள் உத்தர பிரதேசத்தின் சாலைகளை அமெரிக்காவைவிட தரமானவையாக மேம்படுத்த வேண்டும். இதற்காக 1 லட்சம் கோடி ரூபாய் வழங்க மோடி அரசு அனுமதி அளிக்கவிருக்கிறது” என்றார்.

ஆகஸ்ட் மாதம், மாநிலங்களவையில் உரையாற்றிய நிதின் கட்கரி, “இந்தியாவின் சாலைக் கட்டமைப்பு அமெரிக்காவுக்கு இணையானதாக இருக்கும். அதற்கான நிதிக்குப் பற்றாக்குறையே இல்லை. 2024-ம் ஆண்டுக்குள், பிரதமர் மோடியின் தலைமையில் இந்திய சாலைக் கட்டமைப்பு அமெரிக்காவுக்கு இணையானதாக இருக்கும். இது உறுதி” என்று பேசியிருந்தார்,

2024-ல் மக்களவைத் தேர்தல் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in