டிசம்பர் 2 வரை தென், வட தமிழகத்தில் மழை பெய்யுமா?- வானிலை ஆய்வு மையம் தகவல்

டிசம்பர் 2 வரை தென், வட தமிழகத்தில் மழை பெய்யுமா?- வானிலை ஆய்வு மையம் தகவல்

டிசம்பர் 2 வரை தென், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கேரளா கடலோரப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் டிசம்பர் 1-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலே லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

டிசம்பர் 2-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டம் கொடிவேரியில் 12 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. கோவை மாவட்டம் மாக்கினாம்பட்டி, ஈரோடு மாவட்டம் குண்டேரிப்பள்ளம் ஆகிய இடங்களில் தலா 8 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருப்பதாக தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in