தோட்டத்தில் சுற்றி வளைத்த காட்டுயானைகள்: உயிர் தப்ப வாலிபர் செய்த காரியம் வைரல்

தோட்டத்தில்  சுற்றி வளைத்த காட்டுயானைகள்: உயிர் தப்ப  வாலிபர் செய்த காரியம் வைரல்

கேரளத்தில் தன் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த வாலிபரை காட்டு யானைகள் சுற்றிவளைத்தது. யானைகளிடம் இருந்து தப்பிக்க அருகில் இருந்த மரத்தில் ஒன்றரை மணிநேரம் ஏறி அமர்ந்து தப்பியிருக்கிறார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேரளத்தின் இடுக்கி மாவட்டம், சின்னக்கனல் பகுதியில் சஜி என்னும் வாலிபர் தன் தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு காட்டு யானைகள் கூட்டமாக வந்தன. உடனே சஜி தன் தோட்டத்தில் இருந்த யூகாலிப்டஸ் மரத்தின் மீது ஏறினார். சுமார் ஒன்றரை மணி நேரங்கள் அவர் அந்த ம்ரத்திலேயே இருந்தார். இதனிடையே வனத்துறையினரும், உள்ளூர் மக்களும் யானைகளை மீண்டும் வனத்தை நோக்கி விரட்டினர்.

இதுகுறித்து சஜி கூறுகையில், “யானைகள் என்னை நோக்கி வந்தன. நான் ஓடத் தொடங்கினேன். ஆனால் எனக்குத் தெரியும். யானைகளின் வேகத்தை மிஞ்சி ஓட முடியாது. உடனே அருகில் இருந்த மரத்தில் ஏறினேன். கூச்சல் போட்டேன். அந்த சப்தத்தில் தான் வனத்துறையினரும், மக்களும் வந்தார்கள். ஒருவேளை யானைகள் மரத்தை முட்டி உலுப்பியிருந்தாலும் நான் கீழே விழுந்திருப்பேன். ஆனால் அதிர்ஷ்டவசமாக யானைக் கூட்டம் அப்படிச் செய்யவில்லை. வனத்துறையின்ர் தொடர்ந்து பட்டாசு வெடித்தனர். அந்த சத்தத்தில் யானைகள் காட்டுக்குள் போய்விட்டன. எங்கள் பகுதியில் யானைகள் அடிக்கடி ஊருக்குள் இறங்குவதால் விவசாயமே செய்ய முடியாத சூழல் நிலவுகிறது. அரசு வன விலங்குகளிடம் இருந்து, விவசாய பயிர்களைக் காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ”என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in