வாழைத்தோப்பைக் காலி செய்யும் காட்டுயானைகள்: விவசாயி கண்ணீர்

காட்டுயானைகளால் நாசமான வாழைத்தோப்பு
காட்டுயானைகளால் நாசமான வாழைத்தோப்புவாழைத்தோப்பைக் காலி செய்யும் காட்டுயானைகள்: விவசாயி கண்ணீர்

கோவை ஆலந்துறை பகுதியில் வாழைத்தோப்பிற்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்து வருவதால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.

காட்டுயானைகள் சேதப்படுத்திய வாழைத்தோப்பை பார்வையிடும் வனத்துறை
காட்டுயானைகள் சேதப்படுத்திய வாழைத்தோப்பை பார்வையிடும் வனத்துறைவாழைத்தோப்பைக் காலி செய்யும் காட்டுயானைகள்: விவசாயி கண்ணீர்

கோவை மாவட்டம் ஆலந்துறை சப்பாணி மலைப்பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன் (58). விவசாயியான இவர் சப்பாணி மலைப்பகுதியில் வாழை விவசாயம் செய்து வருகிறார். இவர் இன்று கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வாழைப்பூவுடன் வந்திருந்தார்.

விவசாயி சாமிநாதன்
விவசாயி சாமிநாதன்வாழைத்தோப்பைக் காலி செய்யும் காட்டுயானைகள்: விவசாயி கண்ணீர்

காட்டுயானைகளின் அட்டகாசத்தால் பெரும் நஷ்டத்தைச் சந்தித்த கவலையோடு கண்களில் கண்ணீருடன் வாழ வழியில்லை என்ற கதறினார். இதுகுறித்து அவர் கூறுகையில், " ஆலந்துறை சப்பாணி மலைப்பகுதியில் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறேன். வாழை விவசாயம் பிரதானமாக செய்து வருகிறேன். சப்பாணி மலைப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வாழை விவசாயம் பிரதானமாக நடந்து வருகிறது.

கடந்த இரண்டு மாதங்களாக தினமும் அதிகாலை வேளையில் வரும் காட்டுயானைகள் விடிய விடிய தோப்புக்குள் புகுந்து வாழைகளைச் சாப்பிட்டு சேதப்படுத்தி செல்கின்றன. பட்டாசு வெடித்து விரட்ட வேண்டிய நிலை உள்ளது. 6 லட்ச ரூபாய் செலவு செய்து வாழை விவசாயம் செய்ததற்கு, 83 ஆயிரம் நஷ்டஈடு கிடைக்கிறது. இதைவைத்து எப்படி விவசாயம் செய்வது? எனவே, காட்டுயானைகளைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை தேவை" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in