15 வயதில் மனைவி கர்ப்பம்: பரிசோதனையில் சிக்கிய கணவன், பெற்றோர்கள்!

திருமணம்
திருமணம்hindu

மனைவி கர்ப்பமான மகிழ்ச்சியில் இருந்த கணவர், இரு குடும்பத்தினரின் பெற்றோர் மீதும் வழக்கு பாய்ந்துள்ளது. 18 வயதுக்கு குறைவான பெண்ணைத் திருமணம் செய்தது தெரியவந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், சீதபற்பநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கணபதி(22) எலெக்ட்ரீசியனாக உள்ளார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயதே ஆன சிறுமி ஒருவரும் காதலித்து வந்தனர். இந்தக் காதலுக்கு குடும்பத்தினரும் பச்சைக்கொடி காட்ட, இரு குடும்பத்தினரும் கூடிபேசி இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த மே மாதம் 26-ம் தேதி இவர்களின் திருமணம் நடைபெற்றது. இப்போது அந்த சிறுமி மூன்று மாதம் கர்ப்பமாக உள்ளார்.

இதற்கான சிகிச்சைக்காக அவர் அதேபகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்றார். அங்கு மருத்துவ சிகிச்சைக்கான அடிப்படைத் தரவுகள் சேகரிக்கப்பட்ட போது தான் கர்ப்பமாக இருக்கும் சிறுமிக்கு 15 வயதே ஆகும் தகவல் தெரியவந்தது. இதுகுறித்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து, திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் இதுகுறித்து சீதபற்பநல்லூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதன் பேரில் சிறுமியின் கணவர் கணபதி, இருவரின் பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in