கணவரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு வந்த மனைவியின் நிர்வாண வீடியோ: போலீஸார் விசாரணையில் அதிர்ச்சி

கணவரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு வந்த மனைவியின் நிர்வாண வீடியோ: போலீஸார் விசாரணையில் அதிர்ச்சி

மகாராஷ்டிராவில் இளைஞரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு அவரது மனைவியின் நிர்வாணப்புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பி பணம் பறித்த சம்பவத்தில் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்று அறிந்த போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் இளம்தம்பதியர் வசித்து வந்தனர். இந்த நிலையில் கணவரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு அவரது மனைவியின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் நிர்வாண வீடியோ ஆகியவை ஒரு புதிய செல்போன் எண்ணில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது. அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ அனுப்பிய மர்மநபர், நான் கேட்ட பணத்தைக் கொடுக்காவிட்டால், இந்த புகைப்படங்கள், வீடியோக்களை இணையதளங்களுக்கு அனுப்பி விடுவேன் என்று மிரட்டியுள்ளார். அத்துடன் தான் சொல்லும் எண்ணுக்கு பணத்தை அனுப்ப வேண்டும் என்றும் மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்து போன இளைஞர், மர்மநபர் கூறிய எண்ணுக்கு 4.5 லட்ச ரூபாயை அனுப்பியுள்ளார். இதன் பின் தன் மனைவியின் நிர்வாண புகைப்படம், வீடியோ எப்படி வேறு ஒருவருக்குக் கிடைத்திருக்கும் என்று யோசித்துள்ளார். தனது மனைவியே தன்னிடம் பணம் பறிக்க இப்படி செய்திருந்தால் என்று யோசித்தவர், நடந்த விஷயங்கள் குறித்து போலீஸில் புகார் செய்தார். போலீஸார் நடத்திய விசாரணையில், இளைஞரின் மனைவியும், அவரது காதலனும் சேர்ந்து இந்த மிரட்டல் நாடகத்தை அரங்கேற்றி பணம் பறித்தது தெரிய வந்தது. இதையடுத்து இளைஞரின் மனைவி மற்றும் அவரது காதலன் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கணவரிடம் பணம் பறிக்க காதலனுடன் இணைந்து நிர்வாண வீடியோ, புகைப்படம் எடுத்து அனுப்பிய மனைவியின் செயலால் போலீஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in