காதலித்து திருமணம் செய்த மனைவி நடத்தையில் சந்தேகம்: அடித்துக் கொலை செய்த கணவர் தலைமறைவு

காதலித்து திருமணம் செய்த மனைவி நடத்தையில் சந்தேகம்: அடித்துக் கொலை செய்த கணவர் தலைமறைவு

தூத்துக்குடி மாவட்டத்தில் காதல் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் கொலை செய்துவிட்டு தலைமறைவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி முத்தையாபுரம் திருமாஞ்சிநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜான்ராஜ். இவரது மகன் இம்மானுவேல் அப்துல்லா(32) கூலித் தொழிலாளியாக உள்ளார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கன்னித்தாய் என்பவரைக் காதலித்து திருமணம் செய்தார். இந்தத் தம்பதியினருக்கு நான்கு, மற்றும் மூன்று வயதில் இருமகள்கள் உள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உருகி, உருகி இமானுவேல் அப்துல்லா காதலித்த கன்னித்தாய் மீது கடந்த சில மாதங்களாகவே சந்தேகப்பட்டார். இதனால் கணவன், மனைவிக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுவந்தது. தன் மனைவியோடு சண்டை போட்டுவிட்டு சரிவர வேலைக்குச் செல்லாமலும் இம்மானுவேல் அப்துல்லா இருந்துவந்தார். நேற்று இரவு ஏற்பட்ட சண்டையில் அப்துல்லா அடித்ததில் கன்னித்தாய் சுருண்டு விழுந்து உயிர் இழந்தார். தொடர்ந்து போலீஸாருக்கு பயந்து இம்மானுவேல் அப்துல்லா தலைமறைவாகிவிட்டார். போலீஸார் கன்னித்தாய் உடலைமீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் முத்தையாபுரம் போலீஸார் தலைமறைவாக இருக்கும் இம்மானுவேல் அப்துல்லாவையும் தேடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in