குடிபோதையில் 74 வயது முதியவர் வெறிச் செயல்!

கொலை
கொலை

கணவர் குடித்துவிட்டு வந்ததை மனைவி கண்டித்ததால், முதியவர் ஒருவர் தன் மனைவியைக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயமுருகன்(74). கூலித்தொழிலாளியாக உள்ளார். இவரது மனைவி சுதந்திர கனி(60). இவர்களுக்கு நான்கு மகன், ஒரு மகள் உள்ளனர். இதில் ஒரு மகன் மட்டும் இவர்களோடு வசிக்கிறார். மற்றவர்கள் திருமணம் முடிந்து தனித்தனியே சென்றுவிட்டனர்.

ஜெயமுருகன் பேரன், பேத்தியெல்லாம் எடுத்துவிட்ட நிலையிலும் தீவிர குடிநோயாளியாகவே இருந்தார். தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்வது வழக்கம். அதை சுதந்திரகனி கண்டித்தார்.

இதனால் சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த ஜெயமுருகன் கோபத்தில் தன் மனைவி சுதந்திரகனியை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த சுதந்திரகனியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுதந்திரகனி இன்று காலையில் உயிர் இழந்தார்.

இவ்வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த ஜெயமுருகன் மீது கொலை வழக்காக மாற்றி பதிவு செய்யப்பட்டது. குடிபோதையில் 74 வயது முதியவர் மனைவியைக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in