காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவி: ஒரு கோடி செலவு செய்து தேடிய அப்பாவி கணவன்!

காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவி: ஒரு கோடி செலவு செய்து தேடிய அப்பாவி கணவன்!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரைக்கு கணவனும் மனைவியும் சென்றிருந்தனர். அப்போது மனைவி திடீரென காணாமல் போனார். இந்த நிலையில் மனைவி கடலில் விழுந்து இருக்கலாம் என நினைத்து கடலோர காவல்படைக்கு ஒரு கோடி ரூபாய் செலவு செய்து தேடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்பின்னர் தனது மனைவி கள்ளக்காதலனுடன் ஓடியது தெரிந்ததும் அவர் அதிர்ச்சியில் உறைந்துபோனார்.

விசாகப்பட்டினத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கும் சாய்பிரியா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு கணவன், மனைவி இருவரும் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்கரைக்கு சென்றனர். அப்போது சீனிவாசன் ஒருவருடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் திடீரென அவரது மனைவி சாய்பிரியா அங்கிருந்து மாயமாகிவிட்டார். தொலைபேசியில் பேசி முடித்தவுடன் மனைவியை காணவில்லை என்பதை அறிந்த கணவர் சீனிவாசன், சாய்பிரியா கடலில் விழுந்திருக்கலாம் என்று பயந்து காவல்துறையில் புகார் அளித்தார்.

இதனை அடுத்து ஒரு கோடி ரூபாய் செலவு செய்து கடலோர காவல்படையின் ஹெலிகாப்டரை வரவழைத்து கடல் முழுவதும் சாய்பிரியாவை தேடினர். அப்போது சீனிவாசனிடம் பேசிய உறவினர் ஒருவர் நெல்லூரில் சாய்பிரியா பத்திரமாக இருப்பதாக தெரிவித்தார். பிறகு சாய்பிரியாவை விசாகப்பட்டினம் அழைத்து வந்து விசாரணை செய்தபோது ரவி என்ற நபரை தான் காதலித்ததாகவும், திருமணத்துக்கு பின்பும் அவருடன் பழகி வந்ததாகவும், கடற்கரைக்கு சென்றபோது கணவர் அசந்த நேரத்தில் அங்கிருந்து தப்பி காதலர் ரவியுடன் நெல்லூர் சென்றதாகவும் போலீஸாரிடம் கூறியுள்ளார்.

மனைவி மற்றொரு நபருடன் சென்றது தெரியாமல் ஒரு கோடி ரூபாய் செலவு செய்த கணவன், இந்த செய்தியை கேள்விப்பட்டதும் நொந்து போயுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in