கணவனைக் கொன்ற பெண் கைது
கணவனைக் கொன்ற பெண் கைதுகோடாரியால் கணவனை வெட்டிக் கொன்ற பெண்: 20 தூக்க மாத்திரைகளைக் கொடுத்ததும் அம்பலம்

கோடாரியால் கணவனை வெட்டிக் கொன்ற பெண்: 20 தூக்க மாத்திரைகளைக் கொடுத்ததும் அம்பலம்

தனது கணவனுக்கு 20 தூக்க மாத்திரைகளைக் கொடுத்து கோடாரியால் வெட்டிக்கொன்றதுடன் அவரது பிறப்பு உறுப்பையும் மனைவி அறுத்து வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம் சிங்ராலி மாவட்டத்தில் உள்ள ஒரு புதரில் பிப்.21-ம் தேதி பிரேந்தர் குர்ஜார் என்பவர் காயங்களுடன் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது பிறப்புறுப்பு அறுக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த போலீஸார், பிரேந்தர் குடும்பத்தினர், நண்பர்களிடம் விசாரணை நடத்தினர். ஆனால், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில், பிரேந்தரின் மனைவி காஞ்சன் குர்ஜார் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர து நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணிக்க ஆரம்பித்தனர். அப்போது அவரது கணவரை காஞ்சன் தான் கொலை செய்தார் என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து அவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில்," பிரேந்தர் குர்ஜார் குடிக்கு அடிமையானவர். ஏற்கெனவே 4 திருமணம் செய்துள்ளார். அவரின் சித்ரவதை பொறுக்காமல் அனைத்து மனைவிகளும் அவரிடமிருந்து பிரிந்து சென்று விட்டனர். இந்த நிலையில் ஐந்தாவதாக காஞ்சன் குர்ஜாரை அவர் திருமணம் செய்துள்ளார். குடிபோதையில் அவரை தினமும் பிரேந்தர் சித்ரவதை செய்துள்ளார்.

இதனைப் பொறுக்க முடியாத காஞ்சன் குர்ஜார் தனது கணவனைக் கொலை செய்ய முடிவு செய்துள்ளார். 20 தூக்க மாத்திரைகளை பாலில் கலந்து கொடுத்துள்ளார். இதனால் மயக்கமடைந்த பிரேந்தரை பிப்.21-ம் தேதி கோடாலியால் வெட்டிக்கொலை செய்துள்ளார். அப்படியும் ஆத்திரம் தீராததால் தனது கணவரின் பிறப்பு உறுப்பையும் அறுத்து எறிந்துள்ளார். இதன் பின் அவரது உடலை புதரில் வீசியுள்ளார். அவரை கைது செய்துள்ளோம். காவலில் எடுத்து விசாரிக்கும் போது தான் இந்த விவரங்கள் தெரிய வந்தது. மேலும் இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்று விசாரித்து வருகிறோம் என்றனர்.

கணவனை கோடாரியால் மனைவி வெட்டிக்கொலை செய்த சம்பவம் சிங்ராலி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது-

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in