விவாகரத்து ஜீவனாம்சமாக ரூ.8,750 கோடி வேண்டும்... ‘ரேமண்ட்’ நிறுவனத்தின் அதிபர் மனைவி அதிரடி

கவுதம் சிங்கானியா - நவாஸ் மோடி சிங்கானியா
கவுதம் சிங்கானியா - நவாஸ் மோடி சிங்கானியா

பிரபல ரேமண்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக இருக்கும் கவுதம் சிங்கானியாவிடம் விவாகரத்து கோரியிருக்கும் அவரது மனைவி நவாஸ் மோடி சிங்கானியா, தனக்கும் தங்களது 2 மகள்களுக்கும் ரேமண்ட் குடும்ப சொத்தில் 75 சதவீதம் வேண்டும் எனக் கேட்டிருக்கிறார்.

இந்தியாவின் பிரபல நிறுவனங்களில் ஒன்று ரேமண்ட். ஆடைகள் வர்த்தகத்தில் முத்திரை பதித்திருக்கும் ரேமண்ட், தனது சங்கிலித் தொடர் கடைகளிலும் தலைமுறைகள் தாண்டி வாடிக்கையாளர்களை ஈர்த்திருக்கிறது. தற்போது ரியல் எஸ்டேட் உட்பட பல்வேறு தொழில்களிலும் கொழித்து வருகிறது.

கவுதம் - நவாஸ்
கவுதம் - நவாஸ்

கடந்த சில மாதங்களாக வதந்தியாக பரவி வந்த, ரேமண்ட் அதிபர் கவுதம் சிங்கானியா - மனைவி நவாஸ் மோடி இடையிலான பிரச்சினை, தற்போது விவாகரத்துக்கான ஏற்பாடாக வீதிக்கு வந்திருக்கிறது.

கணவர் கவுதம் ஏற்பாடு செய்த தீபாவளி விருந்தில் மனைவி நவாஸ் அனுமதிக்கப்படாததில், குடும்பத் தகராறு வெளியுலகில் உறுதியானது. இதனையடுத்து ட்விட்டர் பதிவின் மூலமாக, மனைவியுடனான விலகலை கவுதம் சிங்கானியா உறுதி செய்தார். இருதரப்புக்கும் பொதுவானவர்கள் மற்றும் குடும்ப நண்பர்கள் மேற்கொண்ட மத்தியஸ்தம் பலனளிக்கவில்லை.

அமெரிக்க டாலர் மதிப்பில் 1.4 பில்லியன் சொத்து வைத்திருக்கும் கவுதம் சிங்கானியா, மனைவியுடனான விவாகரத்தில் குடும்பச் சொத்தில் எத்தனை இழப்பார் என்பது கடந்த சில தினங்களாக சமூக ஊடகங்களில் பேச்சாக இருந்தது. இதற்கு பதில் அளிப்பது போல, கணவரின் சொத்தில் தனக்கும் தங்களது 2 மகள்களுக்குமாக 75 சதவீதத்தை நவாஸ் கோரியிருக்கிறார். இதன் மூலம் சுமார் ரூ8750 கோடி மதிப்பிலான சொத்துக்களை நவாஸ் கேட்கிறார்.

கவுதம் சிங்கானியா - நவாஸ் மோடி சிங்கானியா
கவுதம் சிங்கானியா - நவாஸ் மோடி சிங்கானியா

ஆனால் இதற்கு கவுதம் சிங்கானியா மறுத்து வருகிறார். குடும்பப் பராமரிப்புக்கான வழக்கமான செலவினங்களையும், மகள்களின் எதிர்காலத்துக்கான செலவுகளையும் ஏற்க முன்வரும் அவர், தனது காலத்துக்குப் பின்னரே சொத்து குடும்ப வாரிசுகளுக்கு போகும் என்கிறார். ஆனால், சொத்தில் 75 சதவீதம் வேண்டும் என்பதில் நவாஸ் உடும்பாக நிற்கிறார்.

குடும்பத்தில் பிரச்சினையை வளர்த்து தனது நிம்மதியை குலைத்த கணவரை பழி தீர்க்கும் நோக்கத்திலும், மனைவி நாவஸ் இந்த நெருக்கடியை விளைவிப்பதாகவும் சொல்கிறார்கள். நாளது கணக்கில் இந்தியாவின் மிகவும் காஸ்ட்லியான விவாகரத்தாக, ரேமண்ட் அதிபரின் குடும்ப விவகாரம் வெடித்திருக்கிறது.

இதையும் வாசிக்கலாமே...

 சேலையில் ஒய்யாரமாய் வலம் வரும் பிரபல நடிகை

உஷார்... சிக்கன் பிரியாணியால் சுயநினைவை இழந்த 3 பேர்!

மணி ரத்னத்தால வாழ்க்கையே போச்சு.. நாசம் பண்ணிட்டார்... பொதுவெளியில் புலம்பிய பிரபலம்!

கொதிக்கும் சாம்பாரில் தவறி விழுந்த 2ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

புகார்கொடுக்கவந்தசிறுமியைசீரழித்தஉதவிஆய்வாளர்கைது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in