மனைவியை அடித்துக் கொன்ற கணவர்: குடிபோதையில் நடந்த விபரீதம்

மனைவியை அடித்துக் கொன்ற கணவர்: குடிபோதையில் நடந்த விபரீதம்

மதுபோதையில் மனைவியை அடித்துக்கொலை செய்த கணவரை போலீஸார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் கோமதியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கமாரி செல்வம். கூலித் தொழிலாளி். இவரது மனைவி தனலெட்சுமி(42). தீராத மதுபழக்கம் கொண்ட தங்கமாரி செல்வம், தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்துவந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு குடிபோதையில் மனைவியைத் தாக்கியதில் தனலெட்சுமி படுகாயம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து தனலெட்சுமி திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்த சம்பவத்தில் குடும்ப வன்முறை வழக்குப் பதியப்பட்டு, தங்கமாரி செல்வம் கைது செய்யப்பட்டு இருந்தார்.

இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த தனலெட்சுமி சிகிச்சைப் பலனின்றி இன்று காலையில் உயிர் இழந்தார். இதனைத் தொடர்ந்து சங்கரன்கோவில் டவுண் போலீஸார் தங்கமாரி செல்வத்தின் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்றினர். குடிபோதையில் மனைவியை அடித்து கணவரே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in