தனியார் கல்லூரி பஸ் மோதி கணவர் கண் முன் மனைவி பலி: மருத்துவமனைக்குச் சென்ற போது நடந்த சோகம்

தனியார் கல்லூரி பஸ் மோதி கணவர் கண் முன் மனைவி பலி: மருத்துவமனைக்குச் சென்ற போது நடந்த சோகம்

மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்ற வழியில் விபத்தில் சிக்கி மனைவி உயிரிழந்த சம்பவம் தஞ்சையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை அருகே உள்ள நடுக்காவேரி பகுதியைச் சேர்ந்தவர் கமலநாதன்.  இவரது மனைவி ஜெயலட்சுமி (59). சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஜெயலட்சுமிக்கு சிகிச்சை அளிப்பதற்காக  நடுக்காவேரியில் இருந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி  மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில்  புறப்பட்டனர். தஞ்சை மேம்பாலத்தில் இருசக்கர வாகனம்  வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த தனியார் கல்லூரி பேருந்து  எதிர்பாராதவிதமாக இவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது  மோதியது.

இதில் நிலை தடுமாறிய ஜெயலட்சுமி கீழே விழுந்தார். அவர் மீது கல்லூரி பேருந்து  ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். கமலநாதனுக்கும்  காயம் ஏற்பட்டது. தன் கண்முன்னே  மனைவி இறந்ததை பார்த்து கமலநாதன் கதறி அழுதார்.

விபத்து குறித்த தகவல் அறிந்த தஞ்சாவூர் நகர  போலீஸார்  சம்பவ இடத்திற்கு வந்து ஜெயலட்சுமியின்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் இதுகுறித்து  வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிகிச்சை பெற சென்றவர் விபத்தில் சிக்கிய உயிரிந்துள்ள சம்பவம் தஞ்சையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in