
பட்டதாரி மனைவியை வேலைக்குச் செல்லுமாறு கணவர் கட்டாயப்படுத்த முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த அரவிந்த் சிங், ரஜினி தம்பதிக்கு கடந்த 1999ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில், தம்பதிகள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக சமீபத்தில் விவாகரத்து பெற்றனர். இதன் காரணமாக மனைவிக்கு ஜீவனாம்சமாக கணவர் மாதந்தோறும் ரூ.25,000 வழங்க வேண்டும் என்று குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், ஜீவனாம்சத்தை ரூ.15,000-ஆக குறைக்க வலியுறுத்தி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் சிங் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தனது மனைவி ரஜினி பி.எஸ்சி பட்டதாரி என்பதால், அவரால் வேலைக்குச் செல்ல முடியும். எனவே, ஜீவனாம்சத்தை ரூ.15,000- ஆக குறைக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சுரேஷ் குமார் கைட் மற்றும் நீனா பன்சால் கிருஷ்ணா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனைவி ஒரு பட்டதாரி என்பதால், அவரை வேலைக்குச் செல்லுமாறு கட்டாயப்படுத்த முடியாது என்று தெரிவித்தனர். மேலும், திருமணத்திற்கு முன்னும், திருமணத்திற்கு பிறகும் ரஜினி வேலைக்கு செல்லாத நிலையில், அவர் கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக வேலைக்குச் செல்ல மறுப்பதாக முன்கூட்டியே அனுமானிக்க முடியாதும் என்று கூறினர்.
பின்னர் அரவிந்த் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதிகள், ஜீவனாம்சத்தை உயர்த்தி தர வேண்டுமென ரஜினி முன்வைத்த கோரிக்கையையும் நிராகரித்து உத்தரவிட்டனர். அதேநேரம் மனைவிக்கு ஜீவனாம்ச பணம் தர தாமதமானால் ஒவ்வொரு நாளும் ஆயிரம் என்ற வகையில் அபராதமாக தர வேண்டும் என்ற குடும்ப நல நீதிமன்ற உத்தரவையும் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
இதையும் வாசிக்கலாமே...
ஷவர்மா சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு; கேரளத்தில் மீண்டும் பரபரப்பு!
அதிர்ச்சி... தூக்கில் தொங்கிய 10 ம் வகுப்பு மாணவி! மர்ம மரணமாக போலீஸார் விசாரணை!
பெரும் சோகம்... டேங்கர் லாரியை மறைத்த பனிமூட்டம்... விபத்தில் 12 பேர் உயிரிழப்பு!
தொடர் துப்பாக்கிச் சூடு: 22 பேர் பலியான பரிதாபம், 50 பேர் காயம்