கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியை தாக்கிய மாரடைப்பு: பிரிக்க முயன்ற சாவும் தோற்றது

கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியை தாக்கிய மாரடைப்பு: பிரிக்க முயன்ற சாவும் தோற்றது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கணவர் இறந்த செய்தி கேட்ட அதிச்சியில் மனைவியும் மாரடைப்பால் உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் பாவாபேட்டை தெரு பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ். பாஜகவில் நிர்வாகியாக உள்ளார். இவரது தந்தை துரைசாமி(77) தாய் மல்லிகா(68) இன்று காலையில் தூங்கிக் கொண்டு இருக்கும்போதே துரைசாமிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரை கணேஷ் உடனே ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு துரைசாமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பினால் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து துரைசாமி உடலுடன் வீட்டுக்குத் திரும்பினர். கணவர் இறந்ததை அறிந்ததும் அதிர்ச்சியில் மல்லிகா மயங்கி விழுந்தார். உடனே குடும்பத்தினர் அலறியடித்து அவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மல்லிகாவைப் பரிசோதித்த மருத்துவர், அதிர்ச்சியால் மல்லிகா மரணமடைந்ததை உறுதி செய்தார்.

துரைசாமிக்கும், மல்லிகாவுக்கும் திருமணம் ஆகி 53 ஆண்டுகள் ஆகிறது. கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் மாரடைப்பால் உயிர் இழந்த சம்பவம் குடும்பத்தினர் மட்டுமன்றி அப்பகுதி மக்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in