காதலை எதிர்த்த தந்தை எரித்துக் கொலை; மகள், காதலன் வெறிச்செயல்: உடந்தையான மனைவி சிக்கினார்!

காதலை எதிர்த்த தந்தை எரித்துக் கொலை; மகள், காதலன் வெறிச்செயல்: உடந்தையான மனைவி சிக்கினார்!

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை மனைவியும் அவரது மகளும் சேர்ந்து எரித்து கொலை செய்த சம்பவம் கோவில்பட்டியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள அச்சங்குளம் காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் ஒருவரின் சடலம் கிடப்பதாக வந்த தகவலின் பேரில் அங்கு காவல்துறையினர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, எரித்து கொல்லப்பட்டது ஞானசேகர் என்ற மீன் வியாபாரி என தெரியவந்தது. இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் ஞானசேகரின் மனைவி ராணி, 16 வயது மகள், மகளின் காதலன் கார்த்திக் ஆகியோரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது, கார்த்திக் என்பவரை மகள் காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு தந்தை ஞானசேகரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் தாய், மகளின் காதலுக்கு உடந்தையாக இருந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ஞானசேகரனை இரும்பு கம்பியால் மனைவி, மகள், காதலன் ஆகியோர் அடித்துக் கொலை செய்துவிட்டு, பின்னர் உடலை வாகனத்தில் எடுத்துச் சென்று அச்சங்குளத்தில் உள்ள காட்டில் பெட்ரோல் ஊற்றி எரித்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மனைவி ராணி, மகள், காதலன் கார்த்திக் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை மனைவி, மகள் மற்றும் காதலன் ஆகியோர் சேர்ந்து எரித்துக் கொலை செய்த சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in