கருப்பு கணவன் மீது வெறுப்பு காட்டிய மனைவி... விவாகரத்து வழங்கியது உயர் நீதிமன்றம்!

கணவன் - மனைவி பரஸ்பர குற்றச்சாட்டு
கணவன் - மனைவி பரஸ்பர குற்றச்சாட்டு

கணவனின் கருப்பு நிறத்தை சுட்டிக்காட்டி, மனைவி வெறுப்பை உமிழ்ந்ததால், அந்த தம்பதிக்கு விவாகரத்து வழங்கியிருக்கிறது கர்நாடகா உயர் நீதிமன்றம்.

கர்நாடக மாநிலத்தில் 2007-ல் திருமணமாகி ஒரு மகள் பிறந்த தம்பதியர் வாழ்வில் சில வருடங்களில் மனக்கசப்பு எழுந்தது. 2012-ல் பெங்களூரு குடும்ப நல நீதிமன்றத்தை அணுகிய கணவன், விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார். அவரின் கோரிக்கையை நிராகரித்த குடும்ப நல நீதிமன்றம், அவரது மனுவையும் தள்ளுபடி செய்தது.

குடும்ப நல நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தும், விவாகரத்து கோரியும் கர்நாடகா உயர் நீதிமன்றத்தை அணுகினார் கணவர். அங்கே வழக்கின் போக்கில் கணவன் - மனைவி பிரச்சினையில் முழு விவகாரங்கள் வெளிப்பட்டன. கணவனின் கருப்பு நிறத்தை முன்வைத்து மனைவி வெறுப்பு காட்டியதாக கணவர் தரப்பில் முறையிடப்பட்டது.

பதிலுக்கு, கணவர் வீட்டில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக குடும்ப வன்முறையின் கீழ் மனைவி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், திருமண உறவுக்கு அப்பால் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், அந்த வகையில் ஒரு குழந்தையும் இருப்பதாகவும் மனைவி குற்றம்சாட்டி இருந்தார்.

ஆனால், கணவனை வெறுத்த மனைவி தனது மகளுடன் கணவனைப் பிரிந்து தாய் வீட்டில் வசிக்க ஏதுவாக, கணவன் மற்றும் அவரது குடும்பத்தார் மீது பொய்ப்புகார் கொடுத்தது வழக்கு விசாரணையில் தெளிவானது. மேலும், கணவனின் நிறத்தை முன்வைத்து மனைவி வெறுத்து வந்ததும் உறுதியானது. இவை இரண்டும் குடும்ப உறவில் ’கொடுமை செய்தலில்’ அடங்கும் என வகைப்படுத்திய உயர் நீதிமன்றம், கணவர் கோரிய விவாகரத்தினை வழங்கி உத்தரவிட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in