‘என் மனைவி கொசுக்கடியால் அவதிப்படுகிறாள்’ - போலீஸிடம் உதவி கேட்ட கணவன்; காவல்துறை செய்தது என்ன?

கொசு
கொசு‘என் மனைவி கொசுக்கடியால் அவதிப்படுகிறாள்’ - போலீஸிடம் உதவி கேட்ட கணவன்; காவல்துறை செய்தது என்ன?

உத்தர பிரதேசத்தின் சந்தௌசியை சேர்ந்த ஒருவர் மருத்துவமனையில் கொசுக்கடியால் தனது மனைவி அவதிப்படுவதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதனையடுத்து போலீஸார் செய்த காரியம் நெகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தின் சந்தௌசியில் உள்ள ஹரி பிரகாஷ் நர்சிங் ஹோமில், ஆசாத் கான் என்பவரின் மனைவி பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இந்த சூழலில் மருத்துவமனையில் கொசுக்கள் அதிகம் இருந்ததால், அவர்கள் கொசுக்கடியில் அவதியடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர் காவல்துறையின் உதவியை நாடினார்.

கொசுக்கடி தொடர்பாக காவல்துறையை நாடிய ஆசாத் கான், “சந்தெளசியில் உள்ள ஹரி பிரகாஷ் முதியோர் இல்லத்தில் என் மனைவி ஒரு குட்டி தேவதையைப் பெற்றெடுத்தாள். என் மனைவி இப்போது வலியால் அவதிப்படுகிறாள், அதனுடன், அதிகமான கொசுக்களும் அவளைக் கடிக்கின்றன. தயவு செய்து எனக்கு உடனடியாக மார்டீன் கொசுவிரட்டி சுருளை வழங்கவும்” என ட்விட் செய்தார்.

இந்த ட்விட்டை கண்ட சில நிமிடங்களில் கொசு விரட்டி சுருளுடன் போலீஸார் மருத்துவமனையை அடைந்தனர். இதனால் நெகிழ்ந்துபோன ஆசாத் கான், தனக்கு உதவிய போலீசாருக்கு நன்றி தெரிவித்தார். அவர், “பிரசவத்திற்காக என் மனைவி மருத்துவமனையில் இருந்தார். தாங்க முடியாத வலியைத் தவிர, கொசுக்களும் அவளைக் கடித்துக் கொண்டிருந்தன. அதிகாலை மணி 2.45 ஆகியிருந்தது, உ.பி காவல்துறையைத் தவிர வேறு யாரிடமும் உதவி தேடுவதை என்னால் நினைக்க முடியவில்லை. எனது ட்விட்டிற்குப் பிறகு 10 முதல் 15 நிமிடங்களில் கொசு விரட்டி சுருள் எனக்குக் கிடைக்கச் செய்தார்கள். உதவிய காவல்துறையினருக்கு நான் மனப்பூர்வமாக நன்றி கூறுகிறேன்” என்று தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in