வலிப்பு வந்து கணவர் இறந்து விட்டதாக கதறி அழுத மனைவி; கழுத்தில் உள்ள காயத்தால் அலர்ட்டான போலீஸ்: அடுத்து நடந்தது என்ன?

கைது செய்யப்பட்ட ஷில்பா.
கைது செய்யப்பட்ட ஷில்பா.

வலிப்பு வந்து கணவர் இறந்ததாக நாடகமாடிய மனைவி, காதலுடன் சேர்ந்து அவரை கழுத்தை நெரித்துக் கொன்று நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கர்நாடகா மாநிலம், பெங்களூரு கோனனகுன்டேவைச் சேர்ந்தவர் மகேஷ் (30). இவரது மனைவி ஷில்பா(27). திருமணத்திற்கு முன்பே சந்தோஷ் என்பவருடன் ஷில்பாவிற்குத் தொடர்பு இருந்துள்ளது. இது காதலாக மாறியுள்ளது. ஆனால், இவர்களது காதலுக்குப் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் வேறு வழியில்லாமல் மகேஷை ஷில்பா திருமணம் செய்துள்ளார். ஆனாலும், பழைய காதலன் சந்தோஷீடன் தொடர்பில் இருந்துள்ளார். திருமணமான பின்னும் ஷில்பாவும், சந்தோஷீம் அடிக்கடி தனிமையில் சந்தித்ததுடன் பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 2-ம் தேதி காரில் தனது கணவரை மாண்டியாவிற்கு ஷில்பா அழைத்துச் சென்றுள்ளார். வலிப்பு வந்து தனது கணவர் இறந்து விட்டதாக மகேஷ் குடும்பத்திற்குத் அங்கிருந்து தகவல் கொடுத்துள்ளார். உயிரற்ற மகனின் உடலைப் பார்த்து மகேஷின் பெற்றோர் கதறி அழுதனர். அப்போது மகேஷின் கழுத்தில் காயம் இருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள், காவல் நிலையத்தில் தங்களது மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக புகார் செய்தனர்.

இதையடுத்து மகேஷ் உடலை போலீஸார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, மகேஷ் கழுத்தை நெரித்துக் கொலை செய்ப்பட்டதாக ஆய்வு அறிக்கை கூறியது. இதையடுத்து ஷில்பாவை போலீஸார் நேற்று பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், மகேஷை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இது தொடர்பாக ஷில்பா கூறுகையில், என் கணவருடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை. அதனால்சந்தோஷீடன் சேர்ந்து எனது கணவரை கொலை செய்ததேன். வலிப்பு வந்து இறந்ததாக கூறினால் நம்பி விடுவார்கள் என்று நம்பினேன். ஆனால், கழுத்தில் இருந்த காயம் காட்டிக் கொடுத்து விட்டது என்றார். இதையடுத்து ஷில்பா, அவரது காதலன் சந்தோஷ் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். கட்டிய கணவனை காதலனோடு சேர்ந்து மனைவியே கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in