கணவனை சரமாரியாக‌ கத்தியால் குத்திய மனைவி; வீட்டிலேயே மருத்துவம் பார்த்ததால் பலி: போதையால் நடந்த விபரீதம்

வினோதினி
வினோதினி

குடிகார கணவனின் கொடுமை தாங்க முடியாமல் சரமாரியாக‌ மனைவி கத்தியால் குத்திக் கொன்றார். வீட்டிலேயே மருத்துவம் பார்த்த மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை விருகம்பாக்கம் மதியழகன் நகரில் வசித்து வந்தவர் கட்டுமான  தொழிலாளி வேல்முருகன் . இவரது மனைவி வினோதினி. வேல்முருகன் தொடர்ந்து மது குடித்துவிட்டு மனைவி வினோதினியை அடித்து  துன்புறுத்துவதை வழக்கமாக செய்துள்ளார். 

இந்நிலையில்,  கடந்த 9-ம் தேதி வழக்கம்போல் குடித்துவிட்டு வேல்முருகன் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி வினோதினி, கோபத்தின் உச்சத்திற்கு சென்றதோடு, வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியால்,  வேல்முருகனை இரண்டு முறை குத்தியுள்ளார்.

இதில் காயமடைந்த கணவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல்,  வீட்டிலேயே வைத்து கை மருத்துவம்  பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வேல்முருகன் உடல் நிலை மோசமடைய தனது உறவினர்களிடம் வினோதினி கூறியுள்ளார். அவர்கள் வேல்முருகனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்ததில், அவர் இறந்ததை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

உடலில் இருக்கும் காயம் குறித்து உடனடியாக விருகம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விருகம்பாக்கம் போலீஸார் வினோதினியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in