பாலில் விஷம் கலந்து கொடுத்து கொல்ல முயற்சி : தப்பிய கணவனை கொழுந்தனோடு சேர்ந்து கொன்ற மனைவி

பாலில் விஷம் கலந்து கொடுத்து கொல்ல முயற்சி : தப்பிய கணவனை கொழுந்தனோடு சேர்ந்து கொன்ற மனைவி

விஷம் கலந்த பாலில் இருந்து தப்பிய கணவனை, தனது கொழுந்தனோடு சேர்ந்து கழுத்தை நெரித்துக் கொலை செய்த இளம்பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.

உத்திரப் பிரதேச மாநிலம் பீகார்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜோல் (27). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த காயத்ரிக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஏற்பட்டது. இந்த நிலையில். ராஜோலின் தம்பி தீரஜீடன் காயத்ரிக்குத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. ராஜோலுக்குத் தெரியாமல் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். இவர்களின் முறையற்ற உறவு ராஜோல் குடும்பத்தாருக்குத் தெரிய வந்தது. இதனால், காயத்ரி, தீரஜை அவர்கள் கண்டித்துள்ளனர். இதனால் இவர்கள் இவரும் சந்திப்பதில் இடையூறு ஏற்பட்டுள்ளது.

தனது கணவனைக் கொலை செய்து விட்டால், பிரச்சினை முடிந்தது என நினைத்த காயத்ரி, ராஜோலுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். ஆனால், பாலில் ஏதோ வாசம் வருகிறது என்பதை அறிந்த ராஜோல் பாலைக் குடிக்கவில்லை. ஆனால், பாலில் விஷம் கலக்கப்பட்டதை அறிந்த ராஜோல், தனது மனைவி மற்றும் தம்பி குறித்து கிராம பஞ்சாயத்தில் புகார் செத்ார். இதன் பேரில் கிராம பஞ்சாயத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. காயத்ரியை கிராமபஞ்சாயத்து மன்னித்ததுடன் கணவனுடன் சேர்ந்து வாழ அறிவுறுத்தியுள்ளது.

இதனால் ராஜோலை கொலை செய்ய அவரது தம்பியும், காயத்ரியும் திட்டமிட்டனர். வீட்டில் யாருமில்லாத நேரத்தில் இருவரும் சேர்ந்து ராஜோலை கழுத்தை நேரித்துக் கொலை செய்தனர். இதில் ராஜோல் மூச்சுத்திணறி உயிரிழந்தார். இதையடுத்து அவரது தீரஜ் தலைமறைவானார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், ராஜோல் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். காயத்ரி நடவடிக்கையில் சந்தேகமடைந்த போலீஸார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் கணவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து காயத்ரியையும், தலைமறைவாக இருந்த தீரஜையும் போலீஸார் நேற்று கைது செய்தனர். இந்த சம்பவம் பீகார்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in