கூலிப்படையை ஏவி கணவனைத் தீர்த்து கட்டிய மனைவி: அம்பலமானது கூடாநட்பு விவகாரம்

தேவராஜ்
தேவராஜ்

திருமணத்தை மீறிய உறவு விவகாரத்தில் கணவரை   கூலிப்படை வைத்து தீர்த்துக் கட்டிய மனைவியையும் அவருக்கு உடந்தையாக இருந்த ஆண் நண்பர் உள்ளிட்ட  இருவரையும் திருச்செங்கோடு போலீஸார்  கைது செய்துள்ளனர்.

திருச்செங்கோடு அருகே  கோழிக்கல்நத்தத்தைச் சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் தேவா (எ) தேவராஜ் (34). இவர் கடந்த 19-ம் தேதி இரவு பணி முடித்துவிட்டு வீடு திரும்பும் வழியில் மர்ம நபர்களால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக திருச்செங்கோடு ஊரக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

போலீஸார் நடத்திய விசாரணையில் தேவராஜின்  மனைவி காயத்ரி (எ) சரண்யாவுக்கு (30)   சங்ககிரியைச் சேர்ந்த விமல்குமார் என்பவர் உடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததும், இந்த கூடாநட்பு விவகாரத்தில்  தேவராஜ் தங்களுக்கு இடைஞ்சலாக இருப்பதால்  மனைவியே கூலிப்படையினர் உதவியுடன் கணவரைக் கொலை செய்ததும்  தெரியவந்தது. 

இதையடுத்து சரண்யா, சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த விமல்குமார், குமாரபாளையத்தைச் சேர்ந்த பைக் மெக்கானிக் கோபாலகிருஷ்ணன் (27) ஆகிய மூவரையும் கைது செய்து திருச்செங்கோடு ஊரக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணத்தை மீறிய உறவால் மனைவியே கூலிப்படை வைத்து கணவரைக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in