கணவரை கொன்று தற்கொலை என நாடகம்: பிரேத பரிசோதனையில் சிக்கிய மனைவி

கொலை
கொலை

ராஜபாளையத்தில் பார்வைக் குறைபாடு, கை, கால் முடக்கம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த மாற்றுத்திறனாளி கணவரை மனைவியே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகில் உள்ள சேத்தூர் காமராகர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தன மாரியப்பன்(46). இவரது மனைவி பாண்டிச்செல்வி. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளுக்குத் திருமணம் முடிந்து கணவரோடு தனியாக வசித்து வருகிறார். ஆரம்பத்தில் நன்றாக இருந்த சந்தன மாரியப்பனுக்கு திடீரென கண் பார்வைக் குறைபாடு ஏற்பட்டது. தொடர்ந்து கை, கால்களும் முடங்கிப் போனது. இதனால் அவரால் எந்த வேலைக்கும் செல்லவில்லை. அரசிடம் இருந்து பணிக்கு செல்ல முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் மட்டுமே பெற்றுவந்தார்.

இந்நிலையில், சந்தன மாரியப்பன் கடந்த 13 ஆண்டுகளாக உடல் குறைபாட்டால் வேலைக்கு செல்லாத போது, அவரது மனைவி பாண்டிசெல்வியே கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். இந்நிலையில் தன் உடல்நிலையை எண்ணி சந்தன மாரியப்பன் வருத்தத்தில் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி பாண்டிசெல்வி, தளவாய்புரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸார் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சந்தன மாரியப்பன் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

போலீஸார் நடத்திய தொடர் விசாரணையில், “பாண்டிச்செல்வி மீது, அவரது கணவர் சந்தன மாரியப்பன் சந்தேகப்பட்டதால் கட்டையால் அடித்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இன்று பாண்டிச்செல்வியைக் கைது செய்தனர்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in