‘இந்தியர்கள் மகிழ்ச்சியற்றவர்கள்’ - உலக மகிழ்ச்சி அறிக்கையில் உக்ரைன், பாகிஸ்தானைவிட பின்தங்கிய இந்தியா!

மகிழ்ச்சியற்றவர்கள்
மகிழ்ச்சியற்றவர்கள்‘இந்தியர்கள் மகிழ்ச்சியற்றவர்கள்’ - உலக மகிழ்ச்சி அறிக்கையில் உக்ரைன், பாகிஸ்தான் மக்களை விடவும் பின்தங்கினார்கள்!

உக்ரைன், ரஷ்யா, பாகிஸ்தான், ஈராக் மற்றும் இலங்கை போன்ற போர் அல்லது பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் நாடுகளில் உள்ள மக்களை விட இந்தியர்கள் மகிழ்ச்சியற்றவர்கள் என்று 2023ம் ஆண்டின் உலக மகிழ்ச்சி அறிக்கை தெரிவித்துள்ளது.

2023ம் ஆண்டின் உலகின் மகிழ்ச்சி அறிக்கை பட்டியலில் உள்ள 137 நாடுகளில் இந்தியா 126வது இடத்தை பிடித்துள்ளது. இப்பட்டியலில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து உள்ளது, அதைத் தொடர்ந்து டென்மார்க் மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் உள்ளது.

2022 உலகிற்கு நெருக்கடியான ஆண்டாகும், உக்ரைனில் போர், பணவீக்கம், பூகம்பங்கள் மற்றும் பல காலநிலை பேரழிவுகள் வரை பல்வேறு நெருக்கடிகளை உலகம் சந்தித்தது. ஆனால் இந்த நாட்களில் மக்கள் தங்கள் வாழ்க்கையில் எவ்வளவு திருப்தியாக இருக்கிறார்கள் என்பது பற்றிய பகுப்பாய்வு அறிக்கை வெளியாகியுள்ளது. இந்தப்பட்டியலில், இலங்கை 112, பாகிஸ்தான் 108, ஈராக் 98 மற்றும் உக்ரைன் 92 ஆகிய இடங்களில் உள்ளன. பொருளாதார ரீதியாக வலுவாக உள்ள நிலையில்கூட, போர் மற்றும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் நாடுகளை விடவும் இந்தியர்கள் மகிழ்ச்சியற்ற நிலையில் இருப்பது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in