மதுரை செல்லும் விமானத்தில் கூட தமிழ் ஒலிப்பதில்லையே ஏன்?: பிக் பாஸ் பிரபலம் கேள்வி

பிக் பாஸ் விக்ரமன்
பிக் பாஸ் விக்ரமன்மதுரை செல்லும் கூட விமானத்தில் தமிழ் ஒலிப்பதில்லையே ஏன்?: பிக் பாஸ் பிரபலம் கேள்வி

சென்னையிலிருந்து மதுரைக்குச் செல்லும் விமானத்தில் இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே அறிவிப்பு செய்கிறார்கள். பலமுறை இது தொடர்பாக கேள்வி எழுப்பியும் தமிழ் ஒலிப்பதில்லையே ஏன்?. இது யார் குற்றம் என பிக் பாஸ் பிரபலம் விக்ரமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அனைவரும் பயன்படுத்தும் போக்குவரத்து சாதனங்களில் இன்று விமானமும் இடம்பிடித்து விட்டது. விமானம் புறப்படும் முன் சில அறிவித்தல்கள் இருக்கும். விமானத்துக்குள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும், அவசரகாலத்தில் பயணிகள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு எச்சரிக்கைகள் குறித்து அறிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு விமானங்களில் இவை இந்தியிலும், ஆங்கிலத்திலும் அறிவிக்கப்படும். திருச்சியிலிருந்து தூத்துக்குடி செல்லும் விமானம் என்றாலும் இதுதான் நிலை. ஆனால், சிங்கப்பூர் செல்லும் ஒரு சில விமானங்களில் தமிழில் அறிவிப்புகள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தமிழகத்தில் இயக்கப்படும் விமானங்களில் தமிழில் அறிவிப்புகள் இடம் பெற வேண்டுமென பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பிக் பாஸ் பிரபலம் விக்ரமனும் இதே கோரிக்கையை வலியுறுத்தி ட்விட் செய்துள்ளார். அதில் அவர், ’’சென்னையிலிருந்து மதுரைக்குச் செல்லும் விமானத்தில் கூட இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே அறிவிப்பு செய்கிறார்கள். பல முறை இது தொடர்பாக கேள்வி எழுப்பியும் தமிழ் ஒலிப்பதில்லையே ஏன்? யார் குற்றம்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in