இயக்குநர் தாய் செல்வம் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்காதது ஏன்?:நடிகை கேப்ரியல்லா விளக்கம்

இயக்குநர் தாய் செல்வம் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்காதது ஏன்?:நடிகை கேப்ரியல்லா விளக்கம்

‘ஈரமான ரோஜாவே 2’ சீரியல் இயக்குநர் தாய் செல்வம் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்காதது ஏன் என்பது குறித்து நடிகை கேப்ரியல்லா விளக்கமளித்துள்ளார்.

சின்னத்திரையில் ‘மெளனராகம்’, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’, ‘ஈரமான ரோஜாவே 2’ உள்ளிட்ட சீரியல்களை இயக்கிய இயக்குநர் தாய் செல்வம் நேற்று காலமானார். இவரது மறைவுக்கு சின்னத்திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்தனர்.

இந்த நிலையில், ‘ஈரமான ரோஜாவே2’ சீரியலின் நாயகியான கேப்ரியல்லா அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்காதது ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு கேப்ரியல்லா தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.

சின்னத்திரை இயக்குநர் தாய் செல்வம்
சின்னத்திரை இயக்குநர் தாய் செல்வம்

இதுகுறித்து அவர் கூறுகையில், " நான் இயக்குநர் தாய் செல்வம் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்காதது ஏன் என்பது நிறைய பேருக்கு பிரச்சினையாக இருக்கிறது. நான் அந்த சமயத்தில் ஊரில் இல்லை. அதனால், அந்த சமயத்தில் நான் அவரைப் பற்றி நான் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்வது சரியாகத் தோன்றவில்லை. தனிப்பட்ட முறையில் என்னுடைய இரங்கலை நிச்சயம் தெரிவிப்பேன். அதை சமூகவலைதளங்களில் பொதுவாக பகிர்ந்தால்தான் நான் அக்கறைக் கொண்டுள்ளேன் என்பது அர்த்தமல்ல. இது மிகவும் சென்சிடிவான விஷயம் என்பதால் இதைப் பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை. நிச்சயம் இது உங்களைப் போலவே, எங்களுக்கும் அதிக வருத்தமான செய்திதான். அவருடைய இழப்பு எங்களுக்கு மிகப் பெரிய நஷ்டம். எங்கள் மனநிலையை புரிந்து கொள்ளுங்கள்" என வேண்டுகோள் வைத்திருக்கிறார் கேப்ரியல்லா.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in