'ஃபேஸ்புக்கில் என் காதலி பதிவிற்கு எதுக்கு லைக் போட்ட?': பள்ளி மாணவனை அடித்து உதைத்த கல்லூரி மாணவன்

'ஃபேஸ்புக்கில் என் காதலி பதிவிற்கு எதுக்கு லைக் போட்ட?':  பள்ளி மாணவனை அடித்து உதைத்த கல்லூரி மாணவன்

ஃபேஸ்புக்கில் தனது காதலியின் பதிவிற்கு லைக் கொடுத்த பள்ளி மாணவரை அடித்து உதைத்த கல்லூரி மாணவரைப் பிடித்து போலீஸார் விசாரணை. நடத்தி வருகின்றனர்.

சென்னை பாண்டிபஜார் பகுதியைச் சேர்ந்தவர் குரு (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், பாண்டிபஜாரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 பயிலும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிளஸ் 2 மாணவி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு தகவலைப் பதிவிட்டுள்ளார். அந்த பதிவிற்கு வேறொரு பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவர் லைக் கொடுத்துள்ளார். இதனைப் பார்த்து கோபமடைந்த மாணவியின் காதலனான கல்லூரி மாணவர், நேற்று மாலை தனது நண்பர்களுடன் சென்று பிளஸ் 2 மாணவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.

இதில் காயமடைந்த மாணவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அத்துடன் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் கல்லூரி மாணவரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in