போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞரை பூட்ஸ் காலால் உதைத்தது ஏன்?- கிருஷ்ணகிரி எஸ்பி விளக்கம்

இளைஞரை பூட்ஸ் காலால் உதைக்கும் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர்
இளைஞரை பூட்ஸ் காலால் உதைக்கும் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர்போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞரை பூட்ஸ் காலால் உதைத்தது ஏன்?- கிருஷ்ணகிரி எஸ்பி விளக்கம்

ஓசூர் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞரை பூட்ஸ் காலால் உதைத்தது ஏன் என்பது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் விளக்கம் அளித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கோபசந்திரம் பகுதியில் சின்ன திருப்பதி கோயில் திருவிழாவையொட்டி நேற்று எருதுவிடும் விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் அனுமதியின்றி எருதுவிடும் ஏற்பாடுகளையும் விழாக்குழுவினர் செய்தனர். 100க்கும் மேற்பட்ட காளைகளுடன் இளைஞர்கள் திரண்டதால் அந்தப் பகுதி பரபரப்பானது. இதையடுத்து, அங்கு போலீஸார் குவிக்கப்பட்டு அனைவரையும் கலைந்துப்போகச் சொல்லி அறிவுறுத்தப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் கிருஷ்ணகிரி- ஓசூர் சாலையின் நடுவே கற்களை கொட்டி போக்குவரத்தை முடக்கினர்.

இளைஞரை பூட்ஸ் காலால் உதைக்கும் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர்
இளைஞரை பூட்ஸ் காலால் உதைக்கும் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர்

இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தனர். அப்போது, அரசு பஸ்கள், லாரிகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீது கற்கள் வீசி தாக்கப்பட்டதால் கண்ணாடிகள் உடைந்தது. இதனால் மீண்டும் அவர்களை கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸார் மீது கல்வீசினர். இதில் போலீஸார் சிலருக்கு மண்டை உடைந்து காயம் ஏற்பட்டது. கலவரத்தில் ஈடுபட்டதாக 200க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரை கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் பூட்ஸ் காலால் தாக்குவதும் லத்தியால் அடிக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஓசூர் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞரை பூட்ஸ் காலால் உதைத்தது ஏன் என்பது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் விளக்கம் அளித்துள்ளார்.

"சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் நான் இளைஞர் ஒருவரை பூட்ஸ் காலால் தாக்குவது போன்ற காட்சி வெளியாகி இருக்கிறது. நேற்று நடந்த போராட்டத்தின் போது பெண் காவலர் ஒருவரிடம் இளைஞர் தகாத முறையில் நடந்து கொண்டார். அவரை பிடித்து அமர வைத்து விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது அவர் தப்பிக்க முயற்சி செய்தார். அதனால் பிடித்து தாக்க வேண்டிய சூழலும் பூட்ஸ் காலால் உதைக்க வேண்டியது நடந்துவிட்டது" என்று சரோஜ்குமார் தாகூர் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in