10 ரூபாய் ஏன் கூடுதலாக கேட்கிறீங்க: தட்டிக்கேட்ட தொழிலாளியை அடித்து உதைத்த டாஸ்மாக் மேலாளர்!

10 ரூபாய் ஏன் கூடுதலாக கேட்கிறீங்க: தட்டிக்கேட்ட தொழிலாளியை அடித்து உதைத்த டாஸ்மாக் மேலாளர்!

மதுபானத்திற்கு பத்து ரூபாய் கூடுதலாக கேட்ட மேலாளரை தட்டிக்கேட்ட தொழிலாளியின் 20 ஆயிரம் ரூபாய் செல்போனை உடைத்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களாக அரசுக்குப் பெரும் தலைவலியாக அமைந்துள்ளது டாஸ்மாக் நிறுவனம். தற்போது டாஸ்மாக் நிறுவனத்திற்கு புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள முத்துசாமி நிர்வாகத்தை திறன்பட செயலாற்ற வேண்டும் என்று ஈரோட்டில் பத்திரிகையாளர் சந்திப்பின் போது மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் பணிபுரியும் ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் அதைத் துளியும் மதிக்காத ஒரு டாஸ்மாக் மேலாளர் பத்து ரூபாய்க்காக கூலித்தொழிலாளியை அடித்து செல்போனை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம், வெப்படை அடுத்த திருச்செங்கோடு செல்லும் சாலையில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இங்கு அப்பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் மது அருந்துவது வழக்கம். அதே பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்ற விசைத்தறி தொழிலாளி கடந்த இரு தினங்களுக்கு முன்பு அந்தக் கடையில் மதுபானம் வாங்க சென்றுள்ளார். அப்போது மதுபானத்திற்கான உரிய விலையை விட 20 ரூபாய் கூடுதலாக அந்த கடையின் மேலாளர் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது ஆனந்தனுக்கும் மேலாளர் மாதேஷுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தாங்கள் சொன்ன விலைக்கு ஆனந்தன் மதுபானத்தை வாங்கவில்லை என்று கோபமடைந்த மேலாளர், கடையின் வெளியே வந்து அவரை அடித்தும் செல்போனை உடைத்தும் சேதப்படுத்தியுள்ளார். இதை அங்குள்ள சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர்.

இதனால் தன் வேலை போகுமோ என்று அச்சப்பட்ட மேலாளர் மாதேஷ் ஆனந்தனை கடத்திச் சென்று இச்சம்பவம் குறித்து மிரட்டி தனக்கு சம்பந்தமில்லை என்று எழுதி வாங்கி உள்ளார். ஒரு வழியாக அங்கிருந்து தப்பி வந்த ஆனந்தன் இது குறித்து வெப்படை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். டாஸ்மாக் மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in