பிக் பாஸில் 50 லட்சத்தை வெல்லப் போவது யார்?

பிக் பாஸில் 50 லட்சத்தை வெல்லப் போவது யார்?

பிக்பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னரோடு 50 லட்ச ரூபாயைப் வெல்லப்போவது யார் என்ற அறிவிப்பு இன்று மாலை வெளியாக உள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 6 போட்டி கடந்த அக்டோபர் 9-ம் தேதி தொடங்கியது. முதலில் 20 போட்டியாளர்கள் மட்டும் வந்த நிலையில், வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வீட்டிற்குள் வந்தார். முதல் வாரமே யூடியூப்பர் ஜி.பி. முத்து தனது குழந்தைகள் நினைவாக உள்ளதாகக்கூறி தானாகவே போட்டியில் இருந்து வெளியேறினார். அடுத்ததாக நடிகை சாந்தி, ஷெரினா வெளியேறினர். இதனையடுத்து நான்காவது வாரத்தில் விஜே மகேஸ்வரியும், ஐந்தாம் வாரத்தில் நிவாஷினியும் வெளியேறினர். இதன் தொடர்ச்சியாக 6வது வாரத்தில் ராபர்ட் மாஸ்டரும், 7வது வாரத்தில் குயின்ஸியும், 8வது வாரத்தில் ராம் மற்றும் ஆயிஷாவும், 9வது வாரத்தில் தனலட்சுமியும், 10வது வாரத்தில் மணிகண்டனும் வெளியேறினர். ,அதுக்கு அடுத்த வாரம் ரச்சித்தாவும், 12-வது வாரத்தில் ஏடிகேயும் வெளியேறினர்.

சமீபத்தில் 3 லட்ச ரூபாய் பணப்பெட்டியுடன் கதிரவன் வெளியேறினார். பின்னர், மிட் நைட் எவிக்‌ஷனில் மைனா நந்தினி வெளியேற்றப்பட்டார். இவரைத் தொடர்ந்து 11,75,000 ரூபாய் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு அமுதவாணன் வீட்டில் இருந்து வெளியேறினார். தற்போது பிக்பாஸ் வீட்டில் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகிய மூவர் மட்டுமே உள்ளனர். இவர்களில், யார் சீசன் 6 நிகழ்ச்சியின் வின்னர், ரன்னர் என்பதை இன்று மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும். போட்டியில் வெல்பவர்களுக்கு டைட்டிலுடன் 50 லட்ச ரூபாய் வழங்கப்பட உள்ளது.

இதற்கிடையே அறம் வெல்லும் என்ற ஹேஸ்டேக்குடன் விக்ரமனுக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும், அசீம் ஆர்மி என்ற பெயரில் அவருக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும் சமூக ஊடங்களில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், விக்ரமனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in