ரேஷன் கடைகளில் 1000 ரூபாய் யார், யாருக்குக் கிடைக்கும்?

ரேஷன் கடைகளில் 1000 ரூபாய் யார், யாருக்குக் கிடைக்கும்?

பொங்கல் பண்டிகைக்காக ரேஷன் கடைகளில் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 ரொக்கம் வழங்கிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த தொகை கிடைக்காது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தோறும் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, ரவை, கோதுமை, உப்பு மற்றும் மஞ்சள் பை, முழு கரும்பு ஆகிய 21 பொருட்களுடன் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த டிசம்பர் 19-ம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில், அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு 1000 ரூபாய் ரொக்கம் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது.

இதன் மூலம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 ரொக்கம் வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அரிசி கார்டு வைத்திருக்கும் நுகர்வோர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசுப்பொருட்கள் மற்றும் 1000 ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in