பிக்பாஸ் வீட்டில் இருந்து முதலில் வெளியேறப்போவது யார்?: லீக்கான தகவல்

பிக்பாஸ் வீட்டில் இருந்து முதலில் வெளியேறப்போவது யார்?: லீக்கான தகவல்

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து முதல் எலிமினேட் செய்யப்படுபவர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 6 நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சி தினமும் இரவு 9.30 மணிக்கு துவங்கி ஒரு மணி நேரமும், ஓடிடியில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பெண்களிடம் அசல் கோளாறு தவறாக நடந்து கொள்கிறார் என்ற சர்ச்சை வெடித்துள்ளது. குயின்ஸியிடம் அசல் கோளாறு தவறாக நடந்து கொண்டார் என்று ரசிகர்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர். குயின்ஸ் அணிந்திருந்த பிளவுஸில் உள்ள டிசைனைப் பிடித்து அசல் இழுப்பது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதே போல மகேஸ்வரி அணிந்திருந்த கிழிந்த மாடல் பேண்ட்டை அசல் தொடர்ந்து தொட்டுள்ளார். அதனால் கூசுகிறது என்று மகேஸ்வரி சொல்லியும் அசல் அதைத்தொடும் வீடியோவையும் ரசிகர்கள் பகிர்ந்து அசலை உடனே வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இதே போல தனலட்சுமியை பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த நிலையில் எல்லா விஷயங்களிலும் மகேஸ்வரி மூக்கை நுழைத்து வருகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. எனவே, இந்த வாரம் முதலில் மகேஸ்வரி எலிமினேட்டாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in