இந்து சமய அறநிலையத் துறை சொத்துகள் யாருக்கு?- உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

இந்து சமய அறநிலையத் துறை சொத்துகள் யாருக்கு?- உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

கோயில் சொத்துக்களை இந்து சமய அறநிலையத் துறை சொத்துகளாக கருதக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது.

கோயில் சொத்துகளை இந்து சமய அறநிலையத் துறை சொத்துக்களாகவோ, கோயில்களை அறநிலையத் துறை கோயில்களாகவோ உரிமை கோர அரசுக்கு தடை விதிக்க கோரியும், கோயில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட சொத்துகளை, சம்பந்தப்பட்ட கோயில்களின் நலனுக்கு மட்டுமே பயன்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு, அறநிலையத் துறை சட்டப்படி, கோயில் சொத்துகளை கோயில் நலனுக்காக, அறநிலையத் துறை ஆணையரின் ஒப்புதல் இல்லாமல் குத்தகைக்கு விட அனுமதியில்லை எனச் சுட்டிக்காட்டியது.

மேலும், கோயில் சொத்துகளை குத்தகைக்கு வழங்க ஆணையருக்கு அதிகாரம் இருந்தாலும், அது சம்பந்தமாக அறங்காவலர்களின் ஆட்சேபணைகளை கேட்க வேண்டும் என சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், கோயில் சொத்துகளை அறநிலையத் துறை சொத்துகளாக கருதக் கூடாது எனவும், அவற்றை அறநிலையத் துறை சட்டப்படி மட்டுமே குத்தகைக்கு அல்லது வாடகைக்கோ விட வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in