'குக் வித் கோமாளி’ சீசன் 3 வெற்றியாளர் யார்?

'குக் வித் கோமாளி’ சீசன் 3 வெற்றியாளர் யார்?

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் வெற்றியாளர் குறித்தான தகவல் வெளியாகி உள்ளது.

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் இந்த வாரம் நிறைவு பெற உள்ளது. இறுதிச்சுற்றில் வித்யுலேகா, அம்மு அபிராமி, ஷ்ருதிகா, சந்தோஷ், கிரேஸ் கருணாஸ், தர்ஷன் ஆகியோர் தேர்வாகி இருந்தனர். இதில் முதல் நபராக ஷ்ருதிகா தேர்வானார். நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு பின்பு வைல்ட் கார்ட் எண்ட்ரியாக வந்த சந்தோஷ், கிரேஸ் கருணாஸ் இருவருமே இறுதிச் சுற்றுக்கு நுழைந்தனர்.

கடந்த வாரம் மூன்றாவது சீசனுக்கான இறுதி கட்டப் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. இதனை அடுத்து தற்போது நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பது குறித்தான தகவல் வந்துள்ளது. இறுதி சுற்றுக்கு முதலில் தேர்வான ஷ்ருதிகா தான் நிகழ்ச்சியின் வெற்றியாளர். போட்டியாளர்களுக்குள் நடந்த கடுமையான போட்டியில் நடிகை ஷ்ருதிகா தான் வெற்றி பெற்று இந்த மூன்றாவது சீசனின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தமிழில் ‘ஸ்ரீ’ படம் மூலமாக அறிமுகமான ஷ்ருதிகா அதற்கு பிறகு சில படங்கள் நடித்திருந்தாலும் அவை தோல்வி படங்களாகவே அமைந்தது. இதனை வெளிப்படையாகவே பல இடங்களில் தெரிவித்திருந்தார் ஷ்ருதிகா. பிறகு திருமணம், குழந்தை என செட்டில் ஆனவருக்கு இப்போது ‘குக் வித் கோமாளி’ மூன்றாவது சீசன் நல்லதொரு கம்பேக்காக அமைந்திருக்கிறது.

‘குக் வித் கோமாளி’ மூன்றாவது சீசன் முடிந்ததும், அடுத்து பிக்பாஸ் ஆறாவது சீசன் அக்டோபர் மாதத்தில் இருந்து தொடங்க இருக்கிறது. மேலும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இருந்தும் ஷ்ருதிகா, ரோஷினி, தர்ஷன் என சில போட்டியாளர்கள் பிக்பாஸ் சீசனுக்குள் நுழைய பேச்சு வார்த்தை நடப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in