இயக்குநர் மிஷ்கின் சொன்ன சொர்க்கத்தின் குழந்தைகள் யார்?

இயக்குநர் மிஷ்கின் சொன்ன சொர்க்கத்தின் குழந்தைகள் யார்?

வாலாஜாபாத்தில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் மாணவர்களுடன் அமர்ந்து இயக்குநர் மிஷ்கின் படம் பார்த்தார்.

தமிழக அரசின் சமீபத்திய முன்னெடுப்பான அரசு பள்ளிகளில் மாதம் ஒரு திரைப்படம் திரையிடல் நிகழ்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி முதலாவதாக சார்லி சாப்ளின் நடித்த 'தி கிட்ஸ்' திரையிடப்பட்டது. இந்த மாதத்திற்கான படம் 'சில்ட்ரன் ஆப் ஹெவன்' நேற்று திரையிடப்பட்டது.

இயக்குநர் மிஷ்கின், வாலாஜாபாத் அரசு பெண்கள் பள்ளிக்கு சென்று மாணவர்களுடன் இப்படத்தைப் பார்த்தார். இதன் மிஷ்கினிடம் குழந்தைகள் கேள்விகள் கேட்க அதற்கு அவர் பதிலளித்தார். இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய மிஷ்கின் "இந்த உன்னதமான படத்தைப் பார்த்த மாணவர்கள் நீங்கள் அனைவரும் சொர்க்கத்தின் குழந்தைகள் தான்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in