தீண்டத்தகாத சாதி எது?: மதுரை சிபிஎஸ்இ பள்ளி வினாத்தாளால் சர்ச்சை

தீண்டத்தகாத சாதி எது?: மதுரை சிபிஎஸ்இ பள்ளி வினாத்தாளால் சர்ச்சை

மதுரையில் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் தேர்வு வினாத்தாளில் தீண்டத்தகாத சாதி எது என கேள்வி கேட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியையும், சர்ச்சையும் ஏற்படுத்தியுள்ளது.

தென்காசியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு பெட்டிக்கடையில் தின்பண்டம் மறுக்கப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி நீங்குவதற்கு முன் மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் தேர்வு வினாத்தாளால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

மதுரை அழகர்கோவில் சாலையில் அரும்பனூர் பகுதியில் தனியார் சிபிஎஸ்இ பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் நேற்று 6-ம் வகுப்பு பாடத்திற்கான சமூக அறிவியல் தேர்வு நடைபெற்றது. அப்போது தேர்வு வினாத்தாளில் பம்பாள் பிரசிடென்சியில் தீண்டத்தகாத சாதியாக எது இருந்தது என கேள்வி கேட்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பம்பாய் பிரசிடென்சியில் மஹர் சமூகத்தை சேர்ந்தவர்களைத் தீண்டத்தகாதவர்களாக ஆதிக்க சாதியினர் நடத்தினர். டாக்டர் அம்பேத்கர் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர் தான்.

தமிழகத்தில் பள்ளிப்பாடப்புத்தகத்தின் முதல் பக்கத்தில் எந்த வகையிலும் தீண்டாமையைக் கடைபிடிக்கக்கூடாது என்று அச்சிடப்பட்ட நிலையில், தனியார் பள்ளித் தேர்வுத்தாளில் பாகுபாடு ஏற்படுத்தும் வகையில் கேட்கப்பட்ட கேள்வி பெரும் சர்ச்சையையும், அதிர்ச்சையும் ஏற்படுத்தியுள்ளது. இப்பள்ளி மீது மாவட்ட கல்வி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமுக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in