நீட் நுழைவுத்தேர்வு முடிவு எப்போது?- தேதியை அறிவித்தது தேசிய தேர்வு முகமை

நீட் நுழைவுத்தேர்வு முடிவு எப்போது?- தேதியை அறிவித்தது தேசிய தேர்வு முகமை

நீட் இளநிலை மருத்துவ நுழைவுத்தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் கடந்த ஜூலை 17-ம் தேதி நடைபெற்றது. பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நீட் நுழைவுத்தேர்வை 17,78,725 பேர் எழுதினர். இதன் தேர்வு முடிகள் வெளியாக காலதாமதம் ஆனது. இதையடுத்து, கலை அறிவியில் மற்று பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், நீட் இளநிலை மருத்துவ நுழைவுத்தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7-ம் தேதி வெளியாகும் என தேசிய தேர்வு முகமை இன்று அறிவித்துள்ளது. நீட் இளநிலை தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்புகள் வரும் 30-ம் தேதிக்குள் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 7-ம் தேதி நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியான பிறகு தமிழகத்தில் பொறியியல் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in