குரூப்-1 முதல்நிலை தேர்வு எப்போது?- டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு!

குரூப்-1 முதல்நிலை தேர்வு எப்போது?- டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு!

2023-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையில் குரூப்-1 அட்டவணை இல்லாமல் இருந்த நிலையில், தேர்வு தேதியை அறிவித்துள்ளது டிஎன்பிஎஸ்சி.

தமிழக அரசு வேலை வாய்ப்புக்கு அடுத்த ஆண்டுக்கான தேர்வுகள் பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. கடந்த 16-ம் தேதி அறிவித்தது. அதன்படி நடப்பாண்டில் அறிவிக்கப்பட்ட 12 தேர்வுகள், அடுத்த ஆண்டு நடைபெறும் என்றும் ஜனவரி 28-ம் தேதி குரூப் 3 தேர்வும், பிப்ரவரி 13-ம் தேதி மருத்துவ அலுவலர் தேர்வும் நடைபெறும் என்றும் கூறப்பட்டிருந்தது. பிப்ரவரி 25-ம் தேதி குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மை தேர்வுகளும், மார்ச் 15-ல் உதவி கால்நடை மருத்துவர் தேர்வும், ஏப்ரல் 9-ல் மாவட்ட கல்வி அலுவலர் தேர்வும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேபோல 2023-ம் ஆண்டில் வெளியாகும் தேர்வுகள் மற்றும் காலிப் பணியிடங்கள் குறித்த 11 அறிவிப்புகளை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது. அதன்படி குரூப் 4 பணி அறிவிப்பு 2023-ம் ஆண்டு நவம்பரில் வெளியிடப்பட்டு, 2024, பிப்ரவரி மாதம் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுபோல, அடுத்தாண்டு மே மாதம் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வும் ஊரக சாலை ஆய்வாளர் பணிகளுக்கான தேர்வும் நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்திருந்தது.

இந்த நிலையில், 2023-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையில் குரூப் 1 அட்டவணை இல்லாமல் இருந்த நிலையில், அடுத்தாண்டு நவம்பரில் குரூப்-1 முதல் நிலை தேர்வு நடைபெறும் என்றும் ஆகஸ்ட்டில் அறிவிப்புவெளியாகும் என்றும் டிஎன்பிஎஸ்சி இன்று அறிவித்துள்ளதோடு, குரூப்-1 உத்தேச அட்டவணையை வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in