`மின் இணைப்புடன் ஆதாரை இணைக்காவிட்டால் என்ன நடக்கும்?- அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்

`மின் இணைப்புடன் ஆதாரை இணைக்காவிட்டால் என்ன நடக்கும்?- அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்காவிட்டால் என்ன நடக்கும் என்ற கேள்விக்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. ஒரு சில இடங்களில் ஓடிபி வருவதில் தாமதம் ஏற்படுகிறது. இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வணிக வளாகம் உள்பட 15 இடங்களில் சென்னையில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. தேவைப்பட்டால் கூடுதல் சிறப்பு முகாம்களை நடத்த மின்வாரியம் தயாராக இருக்கிறது.

டிசம்பர் 31-ம் தேதிக்குள் எத்தனை பேர் ஆதாரை இணைத்து உள்ளனர் என்பதை பார்த்துக் கொண்டு முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு ஒப்புதலை பெற்று அடுத்த கட்ட அறிவிப்பு வெளியிடப்படும். மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. தேவைப்பட்டால் மாவட்ட மின்வாரியம் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்புடன் ஆதாரை இணைக்காவிட்டால் என்ன நடக்கும் என்று கேட்கிறீர்கள். தயவு செய்து ஒரு பதற்றத்தை உருவாக்க வேண்டாம். இது ஒரு நல்ல முயற்சி. சில பேர் எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பாக நேர்த்தியாக இதுவரை ஒரு கோடியே மூன்று லட்சம் பேர் தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்துள்ளார்கள்” என்றார்

வரும் 25-ம் தேதி அரசு விடுமுறை என்பதால் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் சிறப்பு முகாம் இருக்காது. மீதி இருக்கக்கூடிய விடுமுறை நாட்களிலும் இந்த பணிகள் தொடரும். புதிய பணி விவகாரம் மின்வாரிய ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போது ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது முறை அல்ல" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in