பழைய செல்போனை வாங்கினால் என்ன செய்யணும், செய்யக்கூடாது: அலர்ட் செய்யும் குமரி எஸ்பி

பழைய செல்போனை வாங்கினால் என்ன செய்யணும், செய்யக்கூடாது: அலர்ட் செய்யும் குமரி எஸ்பி

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை காவல் நிலையத்தில், காணாமல் போன 211 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு இன்று மதியம் நடைபெற்றது. செல்போன் காணாமல் போனால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த விளக்கமும் இதில் அளிக்கப்பட்டது.

தக்கலை காவல்நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செல்போனை உரியவர்களிடம் வழங்கிய பின்பு கன்னியாகுமரி எஸ்.பி ஹரிகிரன் பிரசாத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “குமரி மாவட்டத்தில் ஏற்கெனவே 111 மொபைல் போன் கோட்டாறு காவல் நிலையத்தில் வைத்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இப்போது 211 செல்போன்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இன்று மட்டும் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான மொபைல் போன்கள் வழங்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் வழியில் மொபைல் போன் கொடுத்தால் உரியவரிடம் ஒப்படைக்க முயற்சிக்க வேண்டும். அது முடியாவிட்டால் காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். அதேபோல் குறைந்த விலைக்கு கிடைக்கிறதே என வழிபோக்கரிடமோ, தெரியாத நபரிடமோ மொபைல் போனை வாங்கக்கூடாது. இதேபோல் இரண்டாம் விலைக்கு மொபைல் போனை வாங்கும்போது விற்பவரின் அடையாள அட்டை, மொபைல் நம்பர் ஒரிஜினல் பில் வாங்குவதோடு அதனை சரிபார்க்க வேண்டும். மொபைல் போனை தொலைத்தவர்கள் உடனடியாக காவல் நிலையத்திலோ அல்லது தமிழ்நாடு சிட்டிசன் போர்டலிலோ புகார் அளிக்க வேண்டும். அப்போது செல்போனின் ஐ.இ.எம்.ஐ எண்ணை தவறாமல் குறிப்பிட வேண்டும். தவறுதலாகக் கிடைத்த மொபைலை யாரும் உபயோகிக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in