ஜிப்மர் அறிக்கையில் இருப்பது என்ன?- கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் நீதிபதி வெளியிட்ட பரபரப்பு தகவல்

ஜிப்மர் அறிக்கையில் இருப்பது என்ன?- கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் நீதிபதி வெளியிட்ட பரபரப்பு தகவல்

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக ஜிப்மர் மருத்துவக்குழு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் என்ன இருப்பது என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடந்து வருகிறது. மாணவியின் உடல் இரண்டு முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த அறிக்கையை ஜிப்மர் மருத்துவக் குழு ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மாணவியின் இரண்டு பிரேத பரிசோதனை அறிக்கை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில், ஜிப்மர் மருத்துவக்குழுவின் அறிக்கை அவர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் கிளப்பிய பெற்றோர், தனது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பெற்றோர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

இந்நிலையில், ஜிப்மர் மருத்துவக்குழு அறிக்கை உயர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் என்ன இருக்கிறது என்பதை நீதிபதி இளந்திரையன் தெரிவித்துள்ளார். அதன்படி, ஜிப்மர் மருத்துவக் குழுவின் அறிக்கையின்படி மாணவி பாலியல் வன்கொடுமையோ கொலையோ செய்யப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் மாணவியின் வலதுபுற மார்பில் இருந்த காயம் மாடியில் இருந்து குதித்தபோது கற்களால் ஏற்பட்டது எனத் தெரிகிறது என்றும் பள்ளியின் 3-வது மாடியின் சுவரில் இருந்தது ரத்தக்கறை அல்ல, அது சிவப்புற பெயின்ட் என நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது என்றும் நீதிபதி தெரிவித்தார்.

இரண்டுமுறை உடற்கூராய்வு செய்ததில் தமிழக மருத்துவக்குழு எடுத்த முடிவுகளை ஜிப்மர் மருத்துவக் குழு ஏற்றுக்கொள்கிறது என்று கூறிய நீதிபதி, மாணவி எழுதிய தற்கொலை கடிதத்தில் மனுதாரர்கள் யாரும் தற்கொலைக்கு தூண்டியதாக கூறவில்லை என்று தெரிவித்தார்.

மேலும், மகளின் மரணத்திற்கு பாலியல் வன்கொடுமை அல்லது கொலை என பெற்றோர் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்று கூறிய நீதிபதி, தற்கொலை கடிதம் சக மாணவிகளின் சாட்சியம் அடிப்படையில் மாணவி வேதியியல் பாடத்தில் சிரமப்பட்டு உள்ளார் என தெரிகிறது என்றும் இரு ஆசிரியர்களும் அறிவுரை கூறிய நிலையில் தற்கொலைக்கு தூண்டிய நபர்கள் என்பதற்கு போதிய ஆதாரம் என்றும் போதிய ஆதாரம் இல்லாத நிலையில் தற்கொலைக்கு தூண்டிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தது தவறு என்றும் நன்றாக படிக்க சொல்வது ஆசிரியர் பணியில் ஒரு அங்கம் ஆகுமே தவிர தற்கொலைக்கு தூண்டும் செயல் அல்ல என்றும் நீதிபதி தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in