மனைவியைக் கொன்று சடலத்துடன் கணவன் செய்த காரியம்: பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி

கைது செய்யப்பட்ட மகேஷ்குமார்.
கைது செய்யப்பட்ட மகேஷ்குமார்.மனைவியைக் கொன்று சடலத்துடன் கணவன் செய்த காரியம்: பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி

கேரளாவில் மனைவியைக் கொலை செய்து அந்த சடலத்துடன் கணவர் உறவு வைத்துக் கொண்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் ஆலுவா அருகே உள்ள தோட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மகேஷ்குமார்(38) வேலை செய்து வந்தார். இவரது மனைவி தென்காசியைச் சேர்ந்த ரத்னவள்ளி(35). இவர்கள் இருவரும் ஆலுவா அருகே வசித்து வந்தனர்.

இந்த நிலையில், தோட்டத்தில் ரத்னவள்ளியின் சடலம் கிடந்துள்ளதைப் பார்த்து அப்பகுதி மக்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ரத்னவள்ளியின் கணவர் மகேஷ்குமாரைப் பிடித்து விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதனால் அவரை காவல் நிலையம் கொண்டு போலீஸார் விசாரித்தனர்.

அப்போது, தனது மனைவி ரத்னவள்ளிக்கும், பக்கத்து வீட்டுக்காரருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகவும், அவருடன் வீட்டை விட்டு விரைவில் வெளியே சென்று விடுவேன் என்று மனைவி மிரட்டினார் என்றும், அதனால் அவரை கழுத்தை நெரித்துக் கொன்று விட்டேன் என்றும் மகேஷ்குமார் கூறினார். அவரை கைது செய்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், ரத்னவள்ளியின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதைப் பார்த்த போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். மூச்சுத்திணறடிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட ரத்னவள்ளியின் சடலத்துடன் மகேஷ்குமார் உறவு வைத்துக் கொண்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in