மருந்துச்சீட்டில் டாக்டர் என்ன எழுதியிருக்கிறார்?: கூகுள் உங்களுக்கு இனி உதவி செய்யப்போகிறது

மருந்துச்சீட்டில் டாக்டர் என்ன எழுதியிருக்கிறார்?: கூகுள் உங்களுக்கு இனி உதவி செய்யப்போகிறது

மருத்துவர்கள் நோயாளிகளுக்கு எழுதித்தரும் மருந்துச்சீட்டில் உள்ள எழுத்துக்கள் புரியவில்லை என்று இனி புலம்ப வேண்டாம். அவர்கள் என்ன எழுதியுள்ளனர் என்பதை புரிந்து கொள்வதற்கான வசதியை கூகுள் நிறுவனம் கொண்டு வரப்போவதாக அறிவித்துள்ளது.

காய்ச்சல், தலைவலி முதல் உடலில் ஏற்படும் நோய்களுக்கு மருத்துவமனைகளுக்குச் சென்று மருத்துவர்களை அணுகி பொதுமக்கள் சிகிச்சை பெறுவது வாடிக்கை தான். அப்போது சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் தொடர்ந்து மருந்து, மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் என்று மருந்துச் சீட்டுக்களில் அவற்றின் பெயர்களை எழுதித்தருவார்கள். ஆனால், அவர்கள் எழுதித்தரும் பெரும்பாலான மருந்து, மாத்திரைகளின் பெயர்கள் புரியாது. மருத்துவத்துறையில் உள்ளவர்களால் மட்டுமே அதில் என்ன எழுதியிருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியும்.

ஆனால், மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் ஒவ்வொரு மருந்தின் பெயரும், கையெழுத்தும் சாமானிய மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவாக இருக்க வேண்டும் என்பது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் விதி. ஒருவர் என்ன மருந்து வாங்கப்போகிறார் என்பதை அறிந்து கொள்ளும் வகையில் மருந்துச்சீட்டு இருக்க வேண்டும் என்றும் விதி உள்ளது. ஆனால், அந்த விதியை பெரும்பாலான மருத்துவர்கள் கடைபிடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் இந்த புலம்பலைக் கேட்டு இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், கூகுள் மாஸ் ஐடியாவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

அண்மையில் நடைபெற்ற கூகுள் ஃபார் இந்தியா நிகழ்ச்சியில், செயற்கை நுண்ணறிவு முறைகளைப் பயன்படுத்தி இந்த புதிய அப்டேட்டை கொண்டு வரபோவதாக, கூகுள் கூறியுள்ளது. அதாவது மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்துச் சீட்டை ஸ்கேன் செய்தால் மருந்துகளின் பெயர் தெளிவாக தெரியும். ஆனால், இந்த பயன்பாடு எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகவில்லை. ஆயினும் கூகுளின் இந்த புதிய அப்டேட் முதற்கட்ட நடவடிக்கையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in