ஜனாதிபதி உரையில் இருக்கும் முக்கிய அம்சங்கள் என்ன? #BudgetSession

ஜனாதிபதி உரையில் இருக்கும் முக்கிய அம்சங்கள் என்ன? #BudgetSession
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

2022-2023 நிதி ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. ஜனாதிபதி உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

* சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் பங்காற்றிய தலைவர்களை நான் மரியாதையுடன் நினைவுகூருகிறேன்.

* நேதாஜி 125-வது ஆண்டு பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுகிறது மத்திய அரசு

* கரோனா 3-வது அலைக்கு எதிராக இந்தியா போராடி வருகிறது. கரோனா காரணமாக பல உயிர்கள் பலியாகியுள்ளன. இதுபோன்ற சூழ்நிலைகளிலும் நமது மத்திய, மாநில, மருத்துவர்கள், செவிலியர்கள், விஞ்ஞானிகள், நமது சுகாதாரப் பணியாளர்கள் குழுவாகப் பணியாற்றினர். நமது சுகாதார மற்றும் முன்னணி ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

* கரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவின் திறன் தடுப்பூசி திட்டத்தில் தெளிவாகத் தெரிந்தது. ஒரு வருடத்துக்குள், 150 கோடி டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி சாதனை படைத்துள்ளோம். இன்று, அதிகபட்ச அளவு மருந்துகளை வழங்குவதில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக இருக்கிறோம்.கொரோனா தடுப்பூசி இயக்கம் நாடு முழுவதும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

* அடுத்த 25 ஆண்டுகளில் அனைத்து மக்களுக்கும் அதிகாரம் அளிக்கும் வகையில் அரசு திட்டம் தீட்டி வருகிறது

* ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ஏழைகள் மருத்துவ வசதி பெற்றுள்ளனர்.

* இந்தியாவின் மருந்து தயாரிப்பு நிறுவனம் மூலம் 180 நாடுகள் பயன்பெற்று வருகின்றன.

* உலக சுகாதார நிறுவனத்தின் முதல் பாரம்பரிய மையம் இந்தியாவில் அமைய உள்ளது.

* கரோனா தடுப்புக்கு ஆயுர்வேதம் மற்றும் இந்திய மருத்துவ முறைகள் பயன்படுகின்றன.

* உலக சுகாதார நிறுவனத்தின் முதல் பாரம்பரிய மருத்துவ மையம் இந்தியாவில் அமைய உள்ளது

* கடந்த ஒரு ஆண்டில் நாட்டின் மொத்த வேளாண் உற்பத்தி பொருட்கள் 33 சதவீகிதம் உயர்ந்துள்ளது. பேரிடர் ஏற்பட்ட போதெல்லாம் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் சரியான காலத்தில் வழங்கப்பட்டது. மத்திய அரசு அமைத்துள்ள உணவு தானிய சேமிப்புக் கிடங்குகள் விவசாயிகளுக்கு பெரிய உதவியை வழங்கியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in