ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சகோதரர்கள்: உறவினர்கள் வீட்டுக்கு வந்தபோது நிகழ்ந்த சோகம்

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சகோதரர்கள்: உறவினர்கள் வீட்டுக்கு வந்தபோது நிகழ்ந்த சோகம்

தஞ்சாவூர் அருகே கல்லணை கால்வாய் ஆற்றில் குளிக்கச் சென்ற அண்ணன், தம்பி இருவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மாயமான அவர்களை தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், தாரநல்லூர் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு மகன்கள் தினேஷ்(21) ராஜேஷ்(18). இவர்கள் இருவரும் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே ஊரணிபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளனர். இந்நிலையில் இன்று ஊரணிபுரத்தில் உள்ள கல்லணை கால்வாய் ஆற்றில், தினேஷ், ராஜேஷ் ஆகிய இருவரும் அவர்களின் உறவினர்களான திருமாறன், திருக்குமரன் ஆகிய நான்கு பேரும் குளிக்க சென்றுள்ளனர்.

அப்போது தினேஷ், ராஜேஷ் இருவரும் ஆற்றின் வேகம் மற்றும் நீரோட்டத்தின் தன்மை தெரியாமல் ஆற்றில் குதித்துள்ளனர். தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால், நீரில் அடித்துச் செல்லப்பட்ட இருவரும் நீரில் மூழ்கி மாயமாகினர். இது குறித்து தகவல் அறிந்த திருவோணம் போலீஸார் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் நீரில் மூழ்கிய இருவரையும் தேடி வருகின்றனர்.

உறவினர் வீட்டுக்கு வந்த இடத்தில் இப்படி ஆழம் தெரியாமல் குதித்து நீரில் அடித்துச் செல்லப்பட்ட சகோதரர்கள் இருவரின் நிலைமை என்ன என்று தெரியாமல் அவரது உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in