
இந்திய அணி எதிரான ஒருநாள் தொடரில் விளையாட உள்ள மேற்கு இந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆல்ரவுண்டர் ஹெட்மையர், வேகப்பந்து வீச்சாளர் தாமஸ் ஆகியோர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து துவங்க உள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 27ம் தேதி துவங்குகிறது. ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ருத்துராஜ் கெய்க்வாட் ஆகியோர் மீண்டும் திரும்பியுள்ளனர்.
டெஸ்ட் தொடரை இழந்த நிலையில், ஒருநாள் தொடரை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் மேற்கு இந்திய தீவுகள் அணி களமிறங்க உள்ளது. இதற்காக அந்த அணியில் ஆல்ரவுண்டர் ஷிம்ரன் ஹெட்மையர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஓஷேன் தாமஸ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மேற்கு இந்திய தீவுகள் அணியின் பேட்டிங் பலம் கூடியுள்ளதாகவும், பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட முடியும் என்று அணி நிர்வாகவும் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள உலக கோப்பை தொடருக்கு மேற்கு இந்திய தீவுகள் தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.