அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு!

அகவிலைப்படி
அகவிலைப்படிமேற்கு வங்க அரசு

மேற்கு வங்க அரசு அனைத்து மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை மூன்று சதவீதம் உயர்த்தி இன்று அறிவித்தது. இது மார்ச் மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023-24 நிதியாண்டுக்கான மேற்கு வங்க மாநில பட்ஜெட்டை இன்று மாநில நிதியமைச்சர் சந்திரிமா பட்டாச்சார்யா சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த முறை பட்ஜெட் உரையில், புதிய தொழில்கள் மற்றும் உற்பத்தித் துறைக்கு ஆதரவளிப்பதற்கான பல நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டன. இளம் ஸ்டார்ட் அப் தொழில்முனைவோருக்கு கடன் வரம்பை தலா ரூ.5 லட்சம் வரை நீட்டிக்க ரூ.350 கோடி நிதியை அறிவிக்கப்பட்டது. மேலும் மேற்கு வங்கத்தின் ஜிடிபி வளர்ச்சி 8.4 சதவீதமாக இருக்கும் என்றும் நிதியமைச்சர் கூறினார்.

பட்ஜெட்டில் விவசாய பண்ணைகளுக்கு வழங்கப்படும் பாசன நீர் மீதான கட்டணங்களை முழுவதுமாக தள்ளுபடி செய்யவும், ரூ.3,000 கோடி செலவில் 11,500 கிமீ கிராமப்புற சாலைகள் அமைக்கவும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in