
பொது சிவில் சட்டதை வரவேற்கிறேன். இந்த சட்டம் அனைவருக்கும் நல்லது என்று மதுரை ஆதீனம் ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் கூறினார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இன்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மதுரை ஆதீனம் ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் வந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்," இந்து அறநிலையத் துறையின் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளது. பொது சிவில் சட்டத்தை வரவேற்கிறேன். இந்த சட்டம் அனைவருக்கும் நல்லது. சாதாரண பொது மக்கள் முதல் ஆன்மிகவாதிகள் வரை அனைவருக்கும் பொதுவான இந்தச் சட்டத்தை வரவேற்கிறேன்" என்றார்.