வடமாநில மக்களுக்காக கோவை- பீகார் இடையே வாராந்தர சிறப்பு ரயில் இயக்கம்!

வடமாநில மக்களுக்காக கோவை- பீகார் இடையே வாராந்தர சிறப்பு ரயில் இயக்கம்!

கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பீகாரை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்தநிலையில் கோவை-பீகார் இடையே வாராந்தர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

கோவையில் இருந்து பீகார் மாநிலம் பராணிக்கு வாராந்தர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதன்படி வருகிற 5-ம் தேதி முதல் வாரந்தோறும் புதன்கிழமை இரவு 12.50 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (எண் 03358) வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு பீகார் மாநிலம் பராணி சென்றடையும். இந்த ரயிலானது வருகிற 3.5.2023 வரை இயக்கப்பட உள்ளது.

மறுமார்க்கமாக வருகிற 1-ம் தேதி முதல் பீகார் மாநிலம் பராணியில் இருந்து வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 11.45 மணிக்கு புறப்படும் ரயில் (எண் 03357) செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோவை வந்தடையும். இந்த ரயிலானது வருகிற 29.4.23 வரை இயக்கப்படும். இந்த ரயிலில் 2-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகள் 2, 3-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகள்-4, படுக்கை வசதி கொண்ட பெட்டிகள்-12, பொதுப்பிரிவு 2-ம் வகுப்பு பெட்டிகள் 4 இணைக்கப்பட்டு இருக்கும்.

இந்த சிறப்பு ரயிலானது ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, எழுறு, ராஜமுந்திரி, விசாகப்பட்டினம், விழியங்கரம், ராயகடா, திட்டலகார், சம்பலூர், ஜார்சுடா, ரோர்கேலா, ஹத்தியா, ராஞ்சி, முறி, போகரோ ஸ்டீல் சிட்டி, தன்பாத், பராக்கர், சித்தரஞ்சன், ஜமந்தரா, மதுபுர், ஜாஜ்ஹா, கியூல் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in