பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி: அக்டோபர் 27 முதல் திருச்சிக்கு மேலும் ஒரு புதிய ரயில் இயக்கம்!

பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி: அக்டோபர் 27 முதல் திருச்சிக்கு மேலும் ஒரு புதிய ரயில் இயக்கம்!

எதிர்வரும் அக்டோபர் 27-ம் தேதி முதல் அகமதாபாத்தில் இருந்து  திருச்சிக்கு புதிய வாராந்திர ரயில் இயக்கப்பட உள்ளது ரயில் பயணிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதிய வாராந்திர சிறப்பு ரயில்  வண்டி எண் 09419 அகமதாபாத்   - திருச்சிக்கு இடையே  எதிர்வரும்  27.10.2022 வியாழக்கிழமை முதல் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. அகமதாபாத்தில்  வியாழன் காலை 9.30 மணிக்கு புறப்பட்டு கல்யாண், புனே மந்திராலயம்,  ரேணிகுண்டா, பெரம்பூர், சென்னை எழும்பூருக்கு  மாலை 4.25 மணிக்கு வந்து சேரும். அங்கிருந்து  விழுப்புரம்,  சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக திருச்சிக்கு அதிகாலை 3.45க்குச் சென்றடையும்.

மறுமார்க்கத்தில் (09420) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.45 மணிக்குப் புறப்பட்டு திங்கட்கிழமை  இரவு 9.15க்கு அகமதாபாத் சென்றடைகிறது. இந்த ரயிலில் சாதாரண ஸ்லீப்பர், 3ஏசி, 2ஏசி,1ஏசி வகுப்புகள் உள்ளன. முன்பதிவு செய்தால் மட்டுமே பயணம் செய்யலாம். தற்போது ஒரு மாதத்திற்கு மட்டும் தற்காலிகமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ரயில் அதிகம் பேர் பயன்படுத்தினால் நிரந்தரமாக்கப்படக்கூடும் என ரயில்வே அறிவித்துள்ளது.

மெயின் லைன் வழியாக செல்லும் இந்த ரயில் மூலமாக  ரேணிகுண்டா (திருப்பதி), மந்திராலயம், புனே, கல்யாண் (மும்பை), பரோடா மற்றும் அகமதாபாத்திற்கு நேரடியாக செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  இதனால் டெல்டா மற்றும் வட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நகரங்களுக்கு செல்வதற்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in